Thursday, March 24, 2016

போலி சான்றிதழ்களை தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்


இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் நவீன 2D Barcode மற்றும்,  Watermark ரகசிய குறியீட்டுடன்  பளிச்சிடும் வண்ணத்தில் அச்சிடப்பட உள்ளது.


இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும்.

வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில் தயாரிக்கப்படும்.


பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும்.  

2D Barcode,  Watermark ரகசிய குறியீடு மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி  பதிவு எண் போன்றவை இடம் பெறும்.  

தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும்.


மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை(Genuineness)  எளிதில் கண்டறியும் வகையில்  மதிப்பெண் பட்டியல் உருவாக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள தேர்வுத் துறையின் கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: