Tuesday, March 15, 2016

வெயிலின் தாக்கத்தால் மின்கட்டணம் அதிகரிக்கும். சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை:

தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில்  இரண்டு மாதங்களுக்கு  ஒரு முறை மின் பயனீட்டு  கணக்கு எடுக்கிறது. 

வீடுகளில், 1 - 100 யூனிட்; 101 - 200; 201 - 500; 500 யூனிட் மேல் என்ற பிரிவுகளில், மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 500 யூனிட்டுக்கு கீழ், மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, தமிழக அரசு மானியம் வழங்குகிறது. ஆனால், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு கட்டணமும் செலுத்த வேண்டும். 


வெயில் காரணமாக வீடுகளில்,  மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், 500 யூனிட்களுக்கு அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துவோர், அரசின் மானியத்தை இழக்க நேரிடும். 


கடந்த நிதி ஆண்டில், வீட்டு மின் நுகர்வோர் மூலம், 5,884 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதில் 500 யூனிட் மேல் உள்ளவர்கள் செலுத்திய கட்டணம் மட்டும், 2,566 கோடி ரூபாய். 

தற்போது, வெயில் காரணமாக, 400 யூனிட் பயன்படுத்தியவர்கள் கூட, 500 யூனிட் மேல் பயன்படுத்தலாம். அவர்களுக்கு, அரசு மானியம் கிடைக்காது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் குறைந்தபட்சம் மாதம் ரூ. 1000/- வரை சேமிக்க முடியும்' என எரிசக்தி துறை அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments: