Monday, January 30, 2017

ஏப்ரல் 29, 30-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன. 

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. 

தேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். 

மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். BC, MBC ,SC,ST ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும். 

தமிழகத்தில் முதலாவது டெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும், அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 

மாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. 

ஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. 

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, டெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்பு மதிப்பெண்) கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

டெட் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் டெட் தேர்வு எழுதலாம். 


Friday, January 27, 2017

ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30க்குள் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்


 
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET- Teachers Eligibility Test)  தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கில், கடந்தாண்டு தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. 

எனவே,  தமிழகத்தில் வரும் 30.04.2017 க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனவும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு  ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில்  வெற்றி பெற்றவர்களை கொண்டு சுமார் 8000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 


Monday, January 16, 2017

16.01.2017 முதல் ATMகளில் ஒரு நாளைக்கு ரூ.10,000 எடுக்கலாம்: வாரத்திற்கு 24000/- என்பதில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பண மதிப்பு நீக்க அறிவிப்பை தொடர்ந்து , ஏடிஎம்களில் தினந்தோறும்  2000/- பிறகு தினந்தோறும்  ரூபாய்  4500/- எடுக்கும் வகையில் இருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(16.01.2016) முதல் ATM களில்,  10,000 ரூபாய் எடுக்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. 

ஆனால் வாராந்திர அளவில் எந்த மாற்றமும் இல்லை.வாரத்தில் 24000/- வரை மட்டுமே எடுக்க முடியும்.

மேலும் , நடப்பு வங்கிக்கணக்கில்(Current Account) இருந்து 50,000 ரூபாய் என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு, தற்போது , ருபாய் 1,00,000/- வரை எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 13, 2017

Kombu Vacha Singamda - Official Lyric Video | G V Prakash Kumar, Arunra...

எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜனவரி 17 ம் தேதி அரசு பொது விடுமுறை நாள்: தமிழக அரசு அறிவிப்பு

 
எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜனவரி 17 ம் தேதியை அரசு பொது விடுமுறை  நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமசந்திரனின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 (17.01.2017 மட்டும்) ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் , உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகள், அரசு வாரியங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்படும். தனியார் நிறுவனங்கள் ஜன.,17 ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.''

இன்று வெளியான அறிவிப்பையடுத்து, நாளை முதல் செவ்வாய் கிழமை வரை 4 நாட்கள் தொடர்ச்சியாக அரசு விடுமுறையாக அமைந்துள்ளது.