Showing posts with label TN TET APRIL 2017. Show all posts
Showing posts with label TN TET APRIL 2017. Show all posts

Monday, January 30, 2017

ஏப்ரல் 29, 30-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன. 

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. 

தேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். 

மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். BC, MBC ,SC,ST ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும். 

தமிழகத்தில் முதலாவது டெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும், அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 

மாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. 

ஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. 

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, டெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்பு மதிப்பெண்) கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

டெட் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் டெட் தேர்வு எழுதலாம்.