Tuesday, September 20, 2016

மார்ச் 2017 - 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் 1 மதிப்பெண் வினாக்களுக்கு OMR விடைத்தாள் : அரசின் ஒப்புதலுக்காக தேர்வுத்துறை அனுமதி கேட்டுள்ளது

 
 
மார்ச் 2017ல் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்,  ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு OMR ( Optical Mark Recognition) விடைத்தாள் வழங்குவது குறித்த ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கி உள்ளது.  
 
கணினி அறிவியல் பாடங்களுக்கு மார்ச் 2000 முதலே, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு OMR விடைத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. TNPSC, TRB, UPSC தேர்வுகள் அனைத்தும் OMR விடைத்தாள்களை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகின்றன.
 
இதனால் ஒரு மதிப்பெண் விடைகள் 100% சரியான முறையில், OMR Reader இயந்திரங்களை பயன்படுத்தி திருத்தப் படுகிறது. மேலும் எத்தனை லட்சம் விடைத்தாட்கள் இருந்தாலும் ஓரிரு நாட்களில் முடிவுகள் அறியப்படும்.  
 
 
 
தேர்தல் துறையில் EVM ( Electronic Voting Machine) இயந்திரத்தை போல, தேர்வுத்துறையில் OMR Reader மிக குறைவான நேரத்தில், 100% நம்பகத்தன்மையான முடிவுகளை தருகிறது.

எனவே மார்ச் 2017ல் நடைபெற உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், அனைத்து பாடங்களுக்கும்  1 மதிப்பெண் வினாக்களுக்கு OMR விடைத்தாள் வழங்குவது குறித்து தேர்வுத்துறை முடிவு செய்து, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும்  மார்ச் 2017 மேனிலைப் பொதுத்தேர்வில்  அனைத்து பாடங்களுக்கும் OMR விடைத்தாள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

5 ஆண்டுகளுக்கு பிறகு, 10 மற்றும் 12ம் வகுப்பில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் , 150 மதிப்பெண்களுக்கும் கொள்குறி வகை (Objective Type) தேர்வுகள் நடத்தப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. மக்கள் தொகையும், மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க, மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம்.

No comments: