Thursday, December 18, 2014

Your Attention Please...




 பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 16.12.2014அன்று  ராணுவ பள்ளியில் தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 132 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, அந்நாட்டு அரசு தூக்கு தண்டனைக்கு விதித்திருந்த தடையை நீக்கி உள்ளது

சிட்னியில் லிண்ட் சாக்லேட் கபே பகுதியில் 15.12.2014 அன்று பயங்கரவாதி நுழைந்து, அங்கிருந்தவர்களை பிணைகைதிகளாக பிடித்து வைத்த சம்பவமும் சிந்திக்க வைக்கிறது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம்  கிராமத்தை  சேர்ந்த 6ம் வகுப்பு  பயிலும்  பிஞ்சு குழந்தை அதே  பள்ளியில்  பயிலும்  10ம் வகுப்பு மாணவன்  ஒருவனால்  பாலியல்  பலாத்காரம்  செய்யப்பட்டு  கொடூரமான முறையில்  கொல்லப்பட்டுள்ளார் .

இவையெல்லாம்  இந்த 2 நாட்களில்  நாம் படித்த செய்திகள். 

இவை மட்டுமா?

தினந்தோறும்  வழியில் செல்லும்  பெண்களிடம்  நகை பறிப்பு .

வீட்டில்  தனியாக  இருக்கும் பெண்களை பயமுறுத்தி , பாலியல்  பலாத்காரம் செய்து , கொலை செய்து  நகைகள்  கொள்ளை.

ஏ.டி.எம் களில்  கொள்ளை 

60 வயதை கடந்த  கிழவர்கள்  கூட  5 வயது குழந்தைகளை பலாத்காரம் செய்தல்.

மர்மக்  கொலைகள் .

குடிப்பது  பரவலாக்கப் பட்ட சாலைகள்.

கும்பலாக சேர்ந்து  தனியாக  சிக்கும்  பெண்களை பலாத்காரம் செய்தல்.

கருணை இல்லம் ,  அனாதை  இல்லங்களில் தங்கி கல்வி பயிலும்  ஆதரவற்ற  குழந்தைகளை  அங்கு பாதுகாப்பில் இருப்பவர்களே பலாத்காரம் செய்தல்.

ஆசிரியர் பணிக்கு  தவறி  வந்த சிலர்  அவர்களிடம்  பயிலும்  மாணவிகளிடமே  செக்ஸ் தொல்லை.

மாணவர்கள்  ஆசிரியர்களையே  ஆள்  வைத்து அடித்தல்.

மாணவர் விடுதிகளில்  ஓரினச்  சேர்க்கைக்கு  வலியுறுத்தும், கட்டாயப் படுத்தும் , பழக்கப் படுத்தும்  சில  சமூக  விரோத  மாணவ கும்பல்கள். அப்படி இணங்காதவனை செப்டிக் தொட்டியில்  தள்ளி கொலை  செய்த  மாணவர்கள்.

இப்ப சொல்லுங்க நீங்க என்ன நினைக்கிறீங்க?

மேல  சொன்ன  யாரா  இருந்தாலும்  அவங்க எல்லாமே  ஸ்கூல் ல  படிச்சவங்க தான் .

அரசு  சார்பா,   இந்த  சமூகத்தை  சரியான  வழியில்  செலுத்தவும் , நல்ல  குணம்  கொண்ட  மாணவர்களை  உருவாக்கவும் , தப்பான எண்ணங்கள், பழக்கங்கள் இருக்குற  மாணவர்களை  அறிவுரை சொல்லி திருத்தவும், எதிர் காலத்துல  வரக் கூடிய தலைமுறை சோம்பேறியா இல்லாம , ஏமாத்துக்காரனா இல்லாம , கடின உழைப்பாளியா, பொறுப்பானவனா, சமூகத்தோட பாதுகாப்புக்கு தானும் ஒரு அங்கமா இருக்குறவனா உருவாக்குற  கடமை  யாருக்குங்க  இருக்கு?

ஆசிரியர்களுக்கு மட்டும் தாங்க  இருக்கு .

வேற  எந்த  துறைக்கும்  இந்த  பொறுப்பு  இல்லேங்க.  வேணும்னா  இவங்க எல்லாம் தப்பு பண்ணிட்டு  வந்தா  தண்டனை  கொடுக்கத் தான் இருக்கு.

நீங்க  என்ன  சப்ஜெக்ட்  வேணும்னாலும்  எடுங்க . ஆனா  ஒரு  மாணவன் நல்லவனா, பொறுப்பானவனா, சமுதாயத்துக்கு  பயனுள்ளவனா  அவனை மாத்த என்ன  சொல்லிக் கொடுக்க  முடியுமோ  அதையும்  சொல்லிக் கொடுங்க.

ஸ்கூல் ல அவனோட  நிஜமான  ரோல் மாடலா இருங்க. அதுக்கு  முக்கியமானது  நீங்க கோவப்  படக்கூடாது. உங்க  நாவில்  இருந்து கடினமான  வார்த்தைகள்  வரக் கூடாது. நீங்க  ஸ்கூல் ல எந்த  மதம்  ஜாதி சார்பாகவும் இருக்கக் கூடாது . 

மாணவன் நோட் புக் ல  ஜாதி  கட்சி  கொடிங்க  வரஞ்சு இருக்குறதையும், சட்டைக்குள்ள ஜாதி  பனியன் போட்டு  வரதையும், புத்தகப்  பைக்குள்ள  செல்போன் மறைச்சு வச்சிட்டு வரதையும், சின்ன சின்ன கத்திங்க  வச்சிருக்குறதையும், இண்டர்வல் டைம் ல  சிகரெட்  பிடிக்கிறது, ஒயிட்னர் யூஸ் பண்ணி  போதை வரவைக்கிறது, கும்பலா சேர்ந்து பீர் குடிக்கிறது, செல்போன் ல போர்ன் வீடியோஸ் பாக்குறது, டவுன் பஸ்ல கேங் வார் நடத்துறது   இப்படி எத்தனையோ விதமா கெட்டுப் பொய் இருந்தாலும்  அவனை  மனுஷனாகுற பொறுப்பு என்னவோ ஆசிரியர்களுக்கு தான் இருக்கு.

ஆசிரியர்களால்  தான்  சமூகம்  குறைந்த  பட்சம்  மிருக  கூட்டமா  மாறாமலாவது இருக்கும்.

நம்ம சந்ததியும்  நாளை  இந்த சமூகத்துல  தானே  வாழணும் ?