Saturday, December 6, 2014

The Beautiful Maldives

மாலத்தீவு மக்களுக்கு இந்தியா தண்ணீர் சப்ளை


          இந்தியப் பெருங்கடல் நாடுகளில் ஒன்றான, சென்னையிலிருந்து 1439 கிலோ மீட்டர் தெற்கே உள்ள அழகான தீவுகளின் நாடு மாலத்தீவு ஆகும். 

       சுற்றுலா  விரும்புவோரின் சொர்க்கமாக திகழும் இந்நாடு  சுமார் 1200 தீவுகளை கொண்டுள்ளது. இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது.
  

              90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. 

              தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத் தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. 


       ஏராளமான  குட்டி தீவுகளைக்  கொண்டுள்ள  மாலத்தீவில்  ஆறுகள்  எதுவும் இல்லை என்பதால் அங்கு குடிநீர் ஆதாரங்கள் இல்லை. கடல் நீரையே சுத்திகரித்து  குடிநீராக  பயன்படுத்துகின்றனர். 

           கடல் நீரை குடி நீராக்கும் தொழிற்சாலையில் நேற்று  தீ விபத்து ஏற்பட்டு கடும் சேதம் அடைந்ததால் , குடிக்க நீர் இன்றி  தலைநகர் மாலேயில்  உள்ள 1 இலட்சம்  மக்கள் தவித்தனர்.

       இந்திய அரசு உடனடியாக போயிங் 17 -III விமானங்கள் மூலமாகவும், ஐ.என்.எஸ் . சுகன்யா போர் கப்பல்கள் மூலமாகவும்  மாலத்தீவுகளுக்கு  குடிநீர் வழங்கி வருவதால்  அம்மக்களின்  குடிநீர் பஞ்சம் தற்காலிகமாக தீர்ந்துள்ளது.


        மாலத்தீவுகளுக்கான  இந்திய ஹை கமிஷனர்  ராஜீவ் சகாரே  மற்றும்  மாலத்தீவின் ராணுவ  அமைச்சர் நஜீம்  இந்தியாவின்  செயலுக்கு நன்றி கூறினர்.

மாலத்தீவு  - ஒரு பார்வை

வரலாறு

                 கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி, கலாசார, வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன.



     மாலைத்தீவுகளின் தொல்பொருள் ஆய்வுபற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள்  ஆணையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த பௌத்த சிதைவுகளை ஆராயும் நோக்கில் அங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. கிபி 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.

பொருளாதாரம் 

          மாலத்தீவுகளின் 50% வருமானம்  மீன்பிடி தொழில்  மூலமாக கிடைக்கிறது .  சுற்றுலா துறை மூலம்  20% வருமானமும் , மீதம் குடிசைத்  தொழில்கள்  மூலமும்  கிடைக்கிறது.

எவ்வாறு செல்வது?

         சென்னையிலிருந்து  தினந்தோறும்  விமானங்கள்  இயக்கப் படுகின்றன. 1439 கி.மீ . தொலைவு.  2 மணி நேர விமான பயணம். 06.12.2014 நிலவரப்படி மாலத்தீவு சென்று  வர ஒரு ஆளுக்கு சுமார் 23,000 ருபாய் செலவாகும். 

       மாலியில் எங்கு சொல்ல வேண்டுமானாலும் டாக்ஸி கிடைக்கின்றது. 20 ருபியாவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம் மாலியை ஒருமுறை.

      நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு வாரம் தங்கி சுற்றிப்பார்க்க விமான கட்டணம் உட்பட கிட்டத்தட்ட இந்திய பணத்தில் 1,00,000 செலவாகும். இந்திய பணம் 3.6 ரூபாய்க்கு மாலியின் 1 ருபியா கிடைக்கின்றது.

     மாலத்தீவின் அருகே விமானம்  வர வர சன்னல் ஓரத்து இருக்கையாக  இருந்தால் கீழே பச்சை நிற நீரில் நுரைகள் தள்ளும் நீல நிறத்தீவுகள் ஆங்காங்கே கடலில் மிதக்கும் சொர்க பூமிகள். 


     மேலிருந்து பார்ப்பது ஆனந்தம். அலைகள் குறைவான கடலும் அதில் மிதக்கும் கப்பல்களாய் தீவுகள். 1200 தீவுகளில் 350  தீவுகள் கொஞ்சம் பெரியவை.

        கிட்டத்தட்ட பல தீவுகளில் வெறும் ரெசார்ட்ஸ் மற்றும் நட்சத்திர பிதக்கும் வாட்டர் ஹோட்டல்கள் மட்டும்தான் இருக்கும். அங்கு இந்தியா, இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவைச்சேர்ந்த வேலையாட்கள் எல்லா நிலையிலும் இருப்பார்கள். 



     அந்தந்த தீவுகளுக்கு செல்ல வாட்டர் ஜெட் விமானங்களும் (தண்ணீரில் தரை இறங்கும்), சொகுசு கப்பல்களும் செல்லும். அங்கிருக்கும் பணியாளர்களுக்கு வருடம் ஒரு முறை ஒரு மாத விடுமுறையும், நல்ல சம்பளமும் கிடைக்கும். ஆனால் ஒரு வருடம் அந்த தீவுக்குள் மட்டுமே இருக்க முடியும்.



        சிறிய விமான நிலையம். எல்லா செக்கிங்களை முடித்துவிட்டு வெளியே வந்தால் இருபதடி தூரத்தில் கடல். விமான நிலையமே ஒரு குட்டி தீவு என்பதால் அங்கிருந்து மாலி நகருக்கு (இரண்டாவது பெரிய நகரம்- மற்றும் தலைநகரம்) சிறிய  ரக கப்பலில் அனைவரையும் ஏற்றிக்கொள்கிறார்கள். ஒரு பத்து நிமிட பயணத்தில் மாலி.

   பொதுவாக ஒரு பத்து அல்லது பதினைந்து கிலோமீட்டருக்குள் அடங்கிவிடுகிறது மாலி. 

 அழகான கடர்கரை காஸ்ட்லியான போட்டுகள்...வித்தியாசமான வாழ்க்கை சூழல். மிதமான வெப்பம் அவ்வப்போது திடீரென மழை பெய்யும் சூழ்நிலை.


பொதுவாக ஆங்கிலம் எல்லோரும் பேசுவதால் மொழி பிரச்சனை இருக்காது. நிறைய மலையாளி பெண்களை பார்க்கலாம். 

இந்தியா போன்ற மிகப்பெரிய இடங்களில் இருந்து வருபவர்களுக்கு மாலி ஒரு ஒரு மினியேச்சராகத்தான் தெரியும். மிதமான வெப்பம், அதிக மழை, குளிர் அவ்வளவாக இல்லாத நாடு.

அழகழகான வலம்புரி சங்குகள், கடற் பாசிகள், அறிய பல கடல் பொருட்கள் இங்கே குறைவான விலையில். கடல் நீர் சுத்தமாக கீழிருக்கும் நிலம் தெரிவது சூப்பர்.

 
மாலத்தீவின் அழகு