Wednesday, December 31, 2014

How To Prepare Online CPS Missing Credit Entry Successful?

Successful ஆக  CPS  Missing Credit Entry செய்வது எப்படி?

1. முதல்ல உங்க Officeல இருக்குறவங்களோட Missing Credit Detailஐ ஒரு படிவத்துல Fill  பண்ணி வச்சிட்டீங்களா? அப்படி இல்லன்னா  கீழே இருக்குற படிவத்தை டவுன்லோட் பண்ணி தகவல்களை Fill பண்ணி வச்சிக்குங்க.

2. http://218.248.44.123/auto_cps/  லிங்க் ஐ கிளிக் பண்ணி  WebSite ன்  Homepage போங்க.
 

3.  இந்த login விண்டோ ல 
            User Name

       Treasury Code_DDOCode  
 
             Passwors 

  Treasury Code_DDOCode_123

பார்மட் ல டைப் பண்ணி  submit  கொடுங்க .

4. இப்போ  கீழே இருக்குற Opening Screen வரும்.

 5. Top ல  இருக்குற மெனுவில் Missing Credits --> Entry கிளிக் பண்ணுங்க. (See Below)


 6. கிளிக் பண்ண உடனே  உங்க ஆபீஸ் ல Missing Credit இருக்குற அனைவரோட  CPS Number லிஸ்ட் வரும். (See Below)


7.  இங்க இருக்குற எந்த CPS நம்பருக்கும் நீங்க  முதல்ல என்ட்ரி போடலாம். எந்த  நம்பருக்கு என்ட்ரி போடணுமோ அந்த CPS நம்பரை கிளிக் பண்ணுங்க. பண்ணவுடனே கீழே இருக்குற ஸ்க்ரீன் வரும். (See Below)


 8. இந்த ஸ்க்ரீன் ல List of Missing Credits கு கீழே ஒருத்தருக்கு எத்தனை Missing Credits இருக்கோ அத்தனை Entries வரும். ஒவ்வொன்னா  சரி பண்ண  Clear/Edit ல  Edit கிளிக் பண்ணுங்க.

 9. இப்போ உங்க ஆபீஸ்ல வொர்க் பண்ற ஒரு பணியாளருக்கான குறிப்பிட்ட Missing Credit மட்டும் அவர் ஏற்கனவே வொர்க் பண்ண ஸ்கூல் (அ ) ஆபீஸ்ல ல கணக்கில் வந்திருந்தா, அந்த குறிப்பிட்ட Missing Credit Entryஐ  மட்டும் நீங்க அவங்களோட பழைய DDO கு transfer  பண்ணனும். அப்படி இருந்தா மட்டும் கீழே வர ஸ்க்ரீன்ல  Do You Want to forward any other treasury கு நேரா Yes செலக்ட் பண்ணுங்க. என்ட்ரி பண்ணுங்க.(See Below)
 10. அப்படி வேற DDO கு transfer  பண்ணவேண்டியது இல்லன்னா Do You Want to forward any other treasury கு நேரா No செலக்ட் பண்ணுங்க.என்ட்ரி பண்ணுங்க.


 11.  Save கிளிக் பண்ணுங்க. உங்களோட  என்ட்ரி   Process ஆகும். (See Below)

12. பிறகு நீங்க டைப்  பண்ண என்ட்ரி கீழே இருக்குறதை போல வரும். இப்போ நீங்க Finalize The Entries பட்டன் ஐ கிளிக் பண்ணனும் .(See Below)


13. இப்போ
னு  வரும்.   OK கிளிக் பண்ணுங்க . 

14. இப்போ Top ல  இருக்குற மெனுவில் Missing Credits --> Processing Credits கிளிக் பண்ணுங்க.  நீங்க  Finalize பண்ண எல்லா Entriesம்  இங்க Token Number wise ல  Listout ஆகும். (See Below)




15. ஒரு குறிப்பிட்ட Token number ஐ click பண்ணா  அந்த token numberகு கீழே இருக்குற எல்லா Entry list ம் வரும் (See Below)



15. இப்போ முதல்ல உங்க Browser (Firefox or Chrome)ன்  top right corner ல Popup enable  செய்யச் சொல்லி ஒரு message  வந்திருக்கும். அதை கிளிக் பண்ணி Allow popup window கொடுங்க .அப்போதான் உங்களுக்கு PDF ரிப்போர்ட் வரும். 

பிறகு  மேலே  ஸ்க்ரீன்ல இருக்குற Forward to Treasury கிளிக் பண்ணுங்க.  இப்போ உங்களோட  Entries கருவூலத்திற்கு  Forward செய்யப்பட்டு  அதனோட ரிப்போர்ட் PDF பைலாக உங்களுக்கு தெரியும். இதை நீங்க டவுன்லோட் பண்ணலாம் . பரின்ட்  எடுக்கலாம். (See Below)


 

Tuesday, December 30, 2014

Support To Our Hard Workers & Retail Sellers

உழைப்பை போற்றுவோம்

பன்னாட்டு நிறுவனங்களோட சூப்பர் மார்க்கெட்களில் காய்கறி வாங்குறத Status னு  நெனைக்காதீங்க.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள நீங்க வாங்கும்போது ஆயிரம் ஆயிரமா போகும்.  50 கிராம் செல்போனை கூட   20,000  ரூபா கொடுத்து  வாங்குவீங்க. 
நடைபாதை காய்கறி வியாபாரியிடம்  1 ரூபாய்க்கு பேரம் பேசாதீங்க.
நம்ம கிட்டயும் விக்கும் னு  நம்பி தான்  அவங்க கடையை விரிக்குறாங்க.

உழைக்குறவங்களுக்கு  நாம மதிப்பு கொடுக்கலேன்னா, நம்ம உழைப்புக்கு யார் மதிப்பு கொடுப்பாங்க?

எந்த இடத்துல விக்குற காய்கறியும் விவசாயியின் உழைப்பிலும் வியர்வையிலும் விளைஞ்சது தான்.


Our Sincere Thanks To






Friday, December 26, 2014

How to Reduce the Size of PDF file?

PDF கோப்புகளின்  அளவை குறைக்க வேண்டுமா? 

கவலையே படாதீங்க. கீழே இருக்குற வழிமுறைகளை Use பண்ணுங்க. Free ஆயிடுங்க.

1. PDF fileகளோட sizeஐ  குறைக்க  நெறைய வழிகள் இருக்கு. ஆனாலும்   http://www.primopdf.com/ இணையத்தளத்துல  ப்ரீயா கெடைக்குற  PrimoPDF சாப்ட்வேர் ரொம்ப  பயனுள்ளதா இருக்கும்.
(ரொம்ப  Advanceஆன Nitro Pro சாப்ட்வேர் வேணும்னா நீங்க trial version டவுன்லோட் பண்ணி பயன்படுத்தலாம். பிடிச்சிருந்தா purchase பண்ணிக்கலாம்.)

2. நீங்க   http://www.primopdf.com/   site ல PrimoPDF சாப்ட்வேர் டவுன்லோட் பண்ண முடியலைன்னா இந்த primopdf.exe லின்க்ல டவுன்லோட்  பண்ணுங்க .

3. PrimoPDF.exe file ஐ  Install பண்ணுங்க.

Step I:  Open the  PDF  file which you want to reduce the size.  (in any pdf readers like adobe reader, foxit reader).


Step II:  Select  File--> Print


Step III:  Now the Printer Dialog box appeared on the screen.  Select the printer name as PrimoPDF in the list box.


Step IV:  Then select properties



Step V:  Now a dialog box appeared.   In the  paper/quality tab Click Advanced button.

Step VI:  In Graphics Section, Click the Print Quality List box then choose the lesser dbi (like 300dpi or 144 dpi).  Then 
Click OK  ( it will close 5th dialog)
Click OK ( it will close 4th dialog)
Click OK ( it will close  third dialog)  and wait for a moment. 
 
Step VII:  Now the PrimoPDF dialogbox window appeared on the screen. in this window click Create PDF button.


Step VIII:  Now the Save As dialog box appeared.  Type the file name (for reduced PDF file) and click Save  button.

 இந்த வழிமுறைகளை PDF ஆ  டவுன்லோட்  பண்ணும்னா இதை  Procedure for Reducing the PDF file .pdf  கிளிக்  பண்ணுங்க.

Wednesday, December 24, 2014

K BALACHANDAR ( 09.07.1930 - 23.12.2014 )

 
மனதில் உறுதி வேண்டும் 
வார்த்தையிலே தெளிவும் வேண்டும் 
உணர்ச்சி என்பது வேண்டும் 
ஒளிபடைத்த பார்வை வேண்டும்  ஞானதீபம் ஏற்ற வேண்டும்

இடைவரும் பலவிதத் தடைகளை  
தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும் 
இலக்கியம் பெண்மைக்கு இலக்கணம் நீ என  
யாரும் போற்ற வேண்டும்.

மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்  
 மானம் காக்கும் மாந்தர் யார்க்கும் மாலை வாங்கி போடுவோம்.
வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி  
நாடும் ஏடும் பேச வேண்டும்.

சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை
  பூமி பார்க்க வேண்டும்.
தூரத்து தேசத்தில் பாரதப் பெண்மையின் 
பாடல் கேட்க வேண்டும்.

பெண்கள் கூட்டம் பேய்கள் என்று  
பாடம்  சொன்ன சித்தர்களும் 
ஈன்ற தாயும் பெண்மை என்று  
எண்ணிடாத பித்தர்களே.
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்.







தஞ்சாவூர் மாவட்டம்  நன்னிலத்தில்  09.07.1930ல்  தமிழ்  பிராமண குடும்பத்தில்  பிறந்ததவர் கைலாசம் பாலசந்தர்.  அண்ணாமலை  பல்கலைகழகத்தில்  படித்த  உயிரியல்  பட்டதாரியான  இவர்  1949ல்  திருவாரூர் முத்துப்பேட்டையில்  பள்ளி  ஆசிரியராக  தனது கேரியரை துவக்கினார்.

1950ல்  சென்னையில் உள்ள  Account General அலுவலகத்தில்  கிளார்க் ஆக பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில்  பல்வேறு மேடை நாடகங்களுக்கு கதை வசனம்  எழுதியும் , இயக்கியும்  தனது  கலைப் பயணத்தை  துவக்கிய  பாலச்சந்தர்  அவர்கள் எம்.ஜி.ஆர்  அவர்களின்  தெய்வத் தாய்  படத்திற்கு  கதை  வசனம்  எழுதி உள்ளார். 

திரைத்துறையில்  1965ம்  ஆண்டு  வெளியான  நீர்க்குமிழி  இவர் இயக்கிய  முதல் படமாகும் . நாகேஷ்  அவர்கள்  இதில்  கதாநாயகனாக நடித்தார்.

இவருடைய  பெரும்பாலான  படங்களில் , மனித உறவு  முறைகளுக்கு  இடையிலான  சிக்கல்கள் , சமூக பிரச்சினைகள்  ஆகியவையே  கருப்பொருளாய் விளங்கின .

சர்வர் சுந்தரம், பாமா  விஜயம், தில்லு முள்ளு ஆகியன சிறந்த  நகைச்சுவை கலந்த  குடும்ப  சித்திரங்களாகும் .

 

அபூர்வ ராகங்கள் , புன்னகை மன்னன் , எதிர்நீச்சல் , வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி, சிந்து  பைரவி, அவள்  ஒரு  தொடர்கதை, புது புது அர்த்தங்கள், வெள்ளி  விழா, அரங்கேற்றம் , நிழல்  நிஜமாகிறது, மனதில் உறுதி  வேண்டும் முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். 



தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி,  ஒரு வீடு இரு வாசல், கல்கி என்று எத்தனையோ சமுக அக்கறையுள்ள கதைகளை திரைத்துறையில் புகுத்தியவர் கே.பி. 






சிவாஜிராவ்  ஆக  இருந்தவரை  ரஜினிகாந்த்  ஆக  அபூர்வ  ராகங்கள்  படத்தில்  அறிமுகப்  படுத்தியவர். இவரது இயக்கத்தில் உருவான படங்கள் வழக்கமான சினிமா பாணியிலிருந்து சற்று வித்தியாசம் பெற்றிருந்தன. நாடகம் போன்ற அமைக்கப்பட்ட காட்சிகள் இவர் படங்களில் அதிக அளவில் காணப்பட்டாலும், முத்திரை பதிக்கும் வசனங்கள் முழுப்படத்திலும் பரவி இருக்கும்.



 அழுத்தமான கதையை மட்டும் நம்பியே இவரது படைப்புகள் படைக்கப்பட்டதால், பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களை இவர் அவரது படங்களில் தேர்வு செய்தது இல்லை. குறிப்பாக இவர் இயக்கிய எந்த படத்திலும் நடிகர் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை அதேபோல் நடிகர் சிவாஜியும் கூட ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். 

இவரது ஆரம்பக்கட்டம் தொடங்கி பெரும்பாலான படங்களில் நடிகர் நாகேஷ் மட்டும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தார். அதிலும் பாலச்சந்தர் எழுதிய கதையில் உருவான திரைப்படமான சர்வர் சுந்தரம் தான் நடிகர் நாகேஷை புகழின் உச்சத்திற்கே அழைத்து சென்றது.

நகைச்சுவைக்கான முக்கியத் துவத்தை அளித்த இதே இயக்குனர் பாலச்சந்தர், குடும்பச் சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், சமுகப் பிரச்சனைகள் என்று பல்வேறு தரப்பட்ட தனித்துவ கதைகளை துணிச்சலான வகையில் அவர் கையாண்டார். 

துவக்கத்தில் மேடை நாடகங்களுக்கு கதைகள் எழுதியும், அவற்றை இயக்கம் செய்திருந்த கே.பாலச்சந்தர், திரைப்பட இயக்குனராக வெற்றி பின்பும் கூட தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியுள்ளார். 

தொலைக்காட்சிகளில் வெளியாகிய அவரது தொடர் நாடகங்கள் கூட தனிமுத்திரை பதித்து அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரைகளில் தற்போது பிரபலாமாக இல்ல நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் என்னும் முறையையும் இவர் தான் அறிமுகம் செய்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தனது கலை சேவையை தொடர விரும்பிய அவர், அதன் மூலமாகவும் பலருக்கும் பலவிதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 

கலை உலகில் போற்றப்படுபவர்களை பின்தொடராமல், கலையை, அவர் போற்றிய காரணத்தினால் தான் கலைத்துறை கொண்டாடும் இயக்குனராக மக்கள் மனதில்  என்றும்  நீங்காமல்  இடம்  பெற்றிருக்கிறார் கே.பாலச்சந்தர்.