Sunday, October 11, 2015

ஜனவரி 19 முதல் 'ஸ்டிரைக்': அரசு ஊழியர் சங்கம்



"கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், ஜன., 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார். 

"தமிழக அரசு துறைகளில், இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பாமல், அரசு மெத்தனம் காட்டி வருகிறது. பணிச்சுமை, மன அழுத்தம், அதிகாரிகளின் அச்சுறுத்தல் போன்றவை காரணமாக, ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும், 3.5 லட்சம் ஊழியர்களிடம், அரசு, அடக்குமுறையை கையாள்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்"  என்பது உட்பட, பல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, டிச., 22ல், முதல்வரை சந்திக்க உள்ளோம். அதற்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை எனில், வரும், ஜன., 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, October 9, 2015

50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை: 2 லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு


இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, வகுப்புகளை புறக்கணித்ததால், தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை; பல தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. 

காலை, 8:00 மணிக்கே பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், தற்செயல் விடுப்புக் கடிதம் கொடுத்து விட்டு, கூட்டம் கூட்டமாக ஆர்ப்பாட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
 
சென்னை மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில், வேன் ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக ஆர்ப்பாட்டத்துக்கு சென்றனர். தலைமை ஆசிரியர்கள் மட்டும், பணிகளை கவனித்தனர்; பல பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.மற்ற மாவட்டங்களில், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், 50 சதவீத ஆசிரியர்கள் வந்திருந்தனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரவில்லை; மாணவர்களும் வரவில்லை.குறைந்த எண்ணிக்கையில் வந்த மாணவர்களுக்கு, வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், வருகை பதிவு குறிப்பிடப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது.

மொத்தத்தில், தமிழகம் முழுவதும், 40 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும், 10 ஆயிரம் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்,  நேற்று வகுப்புகள் நடக்கவில்லை.மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கு தகவல்கள் கிடைத்தன.

புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் 

வேலைநிறுத்தப் போராட்டத்தில், பெரும்பாலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. அதனால், ஜாக்டோ கூட்டுக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜுலு கூறியதாவது:திருவாரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்கள், 90 சதவீதம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மற்ற இடங்களில், தங்களை அதிகாரிகளாக நினைத்துக் கொள்வதால் பங்கேற்கவில்லை.

தலைமை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்னையோ, பதவி உயர்வு பிரச்னையோ இல்லை. மாறாக, இலவசத் திட்டங்களைக் கவனிக்க, தனி அலுவலர் இல்லாமல், கடுமையாக பாதிக்கப் படுகிறோம். ஆண்டில் மூன்று பருவங்களுக்கு, குறைந்தது, 30 முறையாவது இலவசத் திட்டங்களுக்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், கல்விப் பணிகள் பாதிக்கப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக நிலவரம்:

சென்னை, கோவை, நெல்லை உட்பட, பல மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளிகள் திறந்திருந்தாலும், ஆசிரியர்கள் இல்லாததால் பாடங்கள் நடத்தப்படவில்லை. 

சென்னையில், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள், பணியை புறக்கணித்தனர்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓரளவுக்கு வகுப்புகள் நடந்தன.  

நாகையில்பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை; திறந்திருந்த ஒரு சில பள்ளிகளும், மாணவர்கள் இல்லாமல் வெறிச்சோடின. திருவாரூர் மாவட்டத்தில், 5,432 ஆசிரியர்களில், 4,418 பேர் பணிக்கு வரவில்லை.திருப்பூரில், மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. பல வகுப்புகளின் மாணவர்களை, ஒரே வகுப்பில் அமர வைத்து, மதிய உணவுக்கு பின் வீட்டுக்கு அனுப்பினர்.நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை விட, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் பங்கேற்றனர். 


இளங்கோவன் ஜாக்டோ மாநிலஒருங்கிணைப்பாளர்.

இந்தப் போராட்ட வெற்றி, எங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைத்துள்ளது. இனியும், எங்கள் கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்காமல் இருக்கக் கூடாது.


சாமி.சத்தியமூர்த்தி பொதுச்செயலர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்.

புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பணியைப் புறக்கணித்தனர். 

பேட்ரிக் ரைமண்ட்மாநில தலைவர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
பள்ளியை மூடுவது எங்கள் நோக்கமல்ல. பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்கள் வெற்றியை காட்டி விட்டனர்; அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும்.

ரெங்கராஜன்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

தமிழகத்தில், 95 சதவீத தொடக்கப் பள்ளிகள் இயங்கவில்லை; இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மாற்று ஏற்பாடு செய்தாலும், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளை நடத்த ஆட்களே இல்லை. 

Thursday, October 8, 2015

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: அலட்சியம் காட்டும் அரசு: கலைஞர் கண்டனம்




தமிழகத்தில் ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 
 
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  அரசு பள்ளிகளைச் சேர்ந்த  மூன்று இலட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும்,   ஆசிரியர்களின் பல்வேறு சங்கப் பிரதி நிதிகளை முதலமைச்சரோ,  அந்தத் துறை அமைச்சரோ அழைத்துப் பேச வில்லை.

அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் உருப்படியான  தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது. அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.  ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச்  செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது?  உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதலமைச்சரோடு கலந்து பேசி விட்டு,  போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா? கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என  24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து "ஜேக்டோ" அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில்  இது வரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.   ஆனால் அரசுத் தரப்பில் "ஜேக்டோ" அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.   

வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது  அமைச்சர் உடனடியாக முயற்சிகளை மேற்கொண்டு,  போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்துப் பேசி  சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும்.   ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும்  ஒரு சுமூகமான சூழலை  ஏற்படுத்த எந்தவிதமான  முயற்சியையும் மேற்கொள்ளாத அ.தி.மு.க. அரசுக்கு  என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும்  முன் வர வேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Saturday, October 3, 2015

பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் ( Transfer Application for All )

Click to Download the General  Transfer Application Form 2015 (for ALL teachers)


ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL PROCEEDING & APPLICATION

கணினி பயிற்றுனர்கள் மற்றும் வேளாண்மை பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் சார்ந்த இயக்குனரின் செயல்முறைகள்

 2015-16ம் கல்வியாண்டில் அரசு  நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வு மற்றும் நேரடி நியமனம் செய்யப்பட்ட கணினி பயிற்றுனர்கள் மற்றும் தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் செயல்முறைகள் 


Click Here to Download the pdf file.


Friday, October 2, 2015

How to Delete Browsing History in firefox or chrome ?

How to delete browsing history?   or  
How to delete browsing history in Firefox ?  (or)
 How to delete browsing history   in google chrome address bar ?


Solution

1. In Firefox


1. click the    Menu option at top right side of the window under the close button.


2.
Now a popup menu  list appears.    Click Option


3. Now  Preferences window appears.  Click Privacy option on the left pane

4. Click  clear all current history  under the  History option on the right pane


5. Now Clear All History Dialog box appears. Select  Everything in the drop down list.

6. Click Clear Now button.


In Google Chrome

  1. Click Menu option at top right side of the window under the close button
  2. Click More tools.
  3. Click Clear browsing data.


4. Select the Beginning of time  in Obliterate the following  items from drop down list.



5. Enable (tick) the Check boxes.

6. Click Clear Browsing data button. 

BT TO PG PANEL LIST - AFTER 24.08.2015 COUNSELING

Click Here to Download the  JD(HSS) Proceedings  and Panel List ( Clear List )



Monday, September 28, 2015

தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் தேர்வு இணையதளம் (Teacher Post Employment for Private Schools)




 
இடைநிலை பட்டயச் சான்றிதழ், பி.எட், எம்.எட்  படித்து முடித்து விட்டு தனியார் பள்ளிகளில் வேலை தேட விரும்பும் பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்கண்ட இணையதள முகவரியில் சென்று தங்கள் சுய விவரங்களை பதிவு செய்துக்கொள்ளலாம். விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என இணையதள நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


 
இதேபோல  மாவட்டங்களில் உள்ள   தனியார் பள்ளிகளும் தங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்களின் தேவை விவரங்களை இதில் பதிவு செய்து கொள்ளலாம். 

மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களில் உள்ள, பதிவு செய்த வேலை வேண்டுவோர்களுக்கு முன்னுரிமை அளித்து பள்ளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். இதன்மூலம் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி தேடும் வேலை எளிதாகும் என இணையதள நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



Sunday, September 27, 2015

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: வால்பாறை To சாலக்குடி (பாகுபலி WaterFallsக்கு போலாம் ரைட்)

உங்களை நீங்கள் மறந்திருப்பீர்கள். நீங்கள் மறந்த, எங்கோ நீங்கள் தொலைத்த காதல் மீண்டும் உங்கள் மனம் முழுவதும் பரவும். நீங்கள் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் துள்ளி விளையாடுவீர்கள். குறைந்த பட்சம் உங்கள் மனம் மட்டுமாவது.

உங்கள் பரபரப்பு அடங்கி இருக்கும். உங்கள் கவலைகள் மறக்கப்படும். உங்கள் தன்னம்பிக்கை புதிய நிலங்களில் துளிர்க்கும் தைரியம் பெறும்.

இந்த இடத்தை உங்கள் வசப்படுத்த முடியுமா என்று கூட யோசிப்பீர்கள். இரவே இல்லாத நீண்ட பகல்பொழுது கிடைக்காதா என மனது ஏங்கும். மணித்துளிகள் நிமிடங்களில் கடக்கும். அழகின் பிரம்மாண்டத்தில் விதிர்விதிர்த்து மூச்சடைத்து நிற்பீர்கள்.

மெல்ல மெல்ல நெருங்கி, சட்டென சரிந்து,வேகமாக கீழிறங்கி, விட்டுவிட்டு வெகுதூரம் சிரித்துக்கொண்டே சென்றோடும் காதலியின் பிரிவினை போல ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்.
விட்டு வெளியேறும்போது பிரிந்து செல்லும் காதலர்களைப் போல உணர்வீர்கள்.

இதெல்லாம் எங்கே? 

புன்னகை மன்னன் படத்தில் வரும் நீர்வீழ்ச்சி, பையா படத்தில் "அடடா மழைடா" பாடலில் தமன்னா ஆடும் நீர்வீழ்ச்சி, ராவணன் படத்தில்  "உசுரே போகுதே" பாடல் உட்பட பெரும்பாலான காட்சிகள், அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் அனுஷ்கா'வைக் கடத்தி வைத்திருக்கும் காடு, பாகுபலி திரைப்படத்தில் உள்ளதைக் கொள்ளை கொள்ளும்  நீர்வீழ்ச்சி என இன்னும் பல திரைப்படங்களில் நாம் கண்டு களிக்கும்  அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தான்  அது.

தமிழகத்தில் வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக அதிரப்பள்ளி செல்லலாம்.   ஆசியாவிலேயே மிக நீளமான சோலையார்  அணை   வால்பாறையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. 
 
7 கி.மீ நீளமுள்ள இந்த அணை சாலக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம். கேரளாவின் சாலக்குடி செல்லும் சாலையில் வழச்சல் மற்றும் அதிரப்பள்ளி(65KM) நீர்வீழ்ச்சிகள் அருகருகே 4 கி.மீ இடைவெளியில்  உள்ளன .  

இதேபோல கேரளாவின் திருச்சூரில் இருந்து சாலக்குடி வழியாகவும் அதிரப்பள்ளி(Salakudi to Athirappalli 30 Km) நீர்வீழ்ச்சி அடையலாம். NH47ல் திருச்சூரிலிருந்து சாலக்குடி செல்ல முடியும். சாலக்குடியிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலை ரம்மியமானது. 


இந்த வழியே செல்லும் போது  Dream World Water Theme Park, Silver Storm Water Theme Park  ஆகியவற்றை பார்க்க இயலும். அமைதியான சாலக்குடி ஆறு எதிர்திசையில் சிரித்துக்கொண்டே பயணிக்கும்.

பொதுவாக இங்கு செல்ல செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பொருத்தமான காலம். எங்கு பார்த்தாலும் பசுமை, அமைதி, அழகழகாய் மேகங்கள், ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர், மேலெழும் வெண்பனிப் புகை.. 

சோலையார் அணையைக் கடந்து மலக்கப்பாறை செக்போஸ்ட் வழியாக சோலையார் ரிசர்வ் காடுகள் வழியே செல்லும் பாதை ரம்மியமானது.

வழச்சல் நீர்வீழ்ச்சியை அடைவதற்கு முன்பாக மற்றொரு செக்போஸ்ட் உள்ளது.  வழச்சல் நீர்வீழ்ச்சி  அதிரப்பள்ளிக்கு  5 கி.மீ  முன்பாகவே  உள்ளது.

 பசுமையான காடுகளில் ஊடாக அழகாக செல்லும் சாலை. சாலைகள் எங்கும் வானரங்களின் கொண்டாட்டங்கள். இங்கு நீங்கள் செக்போஸ்ட் சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல முடியும்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைய முதலில் அனுமதிச் சீட்டு பெறவேண்டும். 

இந்த அனுமதிச் சீட்டை அதிரப்பள்ளிக்கு முன்பு 5 கி.மீ தொலைவில் உள்ள வழச்சல் நீர்வீழ்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இரு நீர்வீழ்ச்சிகளும் சோலையாறு வனச்சரகத்திற்கு உட்பட்டது.

இங்கு உங்கள் கவலைகள், மன அழுத்தங்கள் அனைத்தையும் நீங்கள் மறந்து விடுவீர்கள்.

மன அமைதியையும், அளவில்லாத தனிமைப் பேரானந்தத்தையும் அடைவீர்கள்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகை நீங்கள் உணர்வீர்கள். 

 ஏன்? சொல்லப் போனால் நீங்கள் அந்த சூழலையும், அருவியின் அழகையும் ஒரு பெண்ணாக நினைத்து உங்கள் காதலைக் கூட சொல்வீர்கள்.

 இதுக்கு மேலயும் நீங்க யோசிக்கவா போறீங்க? சான்சே இல்ல. எப்போ கெளம்புறீங்க? போயிட்டு திரும்ப வரும்போது நீங்க எடுத்த photos எல்லாம் நம்ம மெயில்'கு அனுப்புங்க.

வேளாண் , கணினி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவு

பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.


ஆசிரியர்களின் சூழலை உணர்ந்து சக ஆசிரியர்களுக்கு நடப்பது போன்று விதிமுறைகளை பின்பற்றி கணினி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 
இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, 30.09.2015 வரை காலியாக உள்ள கணினி மற்றும் வேளாண்மை ஆசிரியர்கள் பணியிடங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக கணக்கிட்டு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.



Click Here to Download the Computer & Agri Teachers Transfer Counselling GO PDF



Friday, September 25, 2015

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை இலவசமாக மின்னணு முறையில் டிச.,31 முன் வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

தாலுகா வாரியாக இதற்கான ஒருங்கிணைப்பு மையங்கள் செப்.,30க்குள் தேர்வு செய்யப்பட உள்ளன. கல்வி உதவித்தொகை, உயர்கல்விக்காக பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகிய மூவகைச்சான்றுகள் தேவைப்படுகின்றன. சில நேரங்களில் இவை தாமதமாக கிடைப்பதால் உரிய காலத்தில் சமர்ப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்..

இந்நிலையில் தாலுகா வாரியாக ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்து டிச.,31க்கு முன் ஆறாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக இந்த மூவகை மின்னணு சான்றிதழை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் (பொறுப்பு) கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். 

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: 

இச்சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரே விண்ணப்பம் தரப்பட்டு நிரப்பி பெறப்படும். 3,000 முதல் 4,000 வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரின்டர், இணையதள வசதியுள்ள பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையங்களாக செப்.,30க்குள் தேர்வு செய்யப்படும். அங்கு தலைமையாசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தினமும் 100 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். விபரங்கள் சரிபார்க்கப்பட்டு டிச.,31க்கு முன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கு கட்டணம் கிடையாது. இதன்மூலம் தாலுகா அலுவலகத்திற்கு செல்வது தவிர்க்கப்படும். இப்பணிகள் கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் நடக்கும், என்றார்

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 143 Postman பணியிடங்கள் - கடைசி தேதி 04.10.2015

Re post
 

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 143 தபால்காரர் (Postman) பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ளன. 

பணியிடத்தின் பெயர்
போஸ்ட்மேன்
மொத்த பணியிடங்கள்
143
கல்வித்தகுதி
10ம் வகுப்பு பாஸ்
வயது வரம்பு
18 முதல் 27க்குள்
வயது வரம்பு தளர்வு

எஸ்.சி/எஸ்.டி,
5 ஆண்டுகள்
(32 வயது வரை)
ஓ.பி.சி
3 ஆண்டுகள் ( 30 வயது வரை)
தேர்வு செய்யும் முறை
தேர்வு
Objective Type – 100 மதிப்பெண்கள்

தேர்வு காலம்
2 மணி நேரம்
விண்ணப்பக் கட்டணம்
(அனைவருக்கும்)
ரூ. 100/-
தேர்வுக் கட்டணம்
ரூ. 400/-
(SC/ST/PH/பெண்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு நடைபெறும் இடங்கள்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி
தேர்வுக்கான பாடங்கள்
10ம் வகுப்பு தரத்திலான
பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ்
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை
www.dopchennai.in இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி
04.10.2015
மேலும் விவரங்களுக்கு