Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Tuesday, May 19, 2015
ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை கெடு
மத்திய அரசின் கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்
பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய
அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா சமீபத்தில் அனுப்பிய
கடிதம் குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் மெட்ரிக்
இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் புதிய உத்தரவுகளை
பிறப்பித்துள்ளனர்.
கடந்த 2011 நவம்பர் முதல் கட்டாயக் கல்விச் சட்டப்படி வெளியிடப்பட்ட
அறிவிப்பின்படி, அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள்
அனைவரும் 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.
இல்லையென்றால் அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டெட் தேர்ச்சி பெறாமல் அரசு பள்ளிகளில் நூற்றுக் கணக்கானோர் மட்டுமே
உள்ளனர்.ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25
ஆயிரம் ஆசிரியர்கள் பட்டப் படிப்பு மட்டும் படித்துவிட்டு, 2011க்குப்
பின் பணியில் சேர்ந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஆசிரியராகத்
தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளது. இதனால் விரைவில் டெட் தேர்வை அரசு
அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலர்
ராபர்ட் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு படி, டெட் தேர்வுக்கு 10
வாய்ப்புகள் தர வேண்டும் அல்லது ஐந்து ஆண்டுகளில் முடிக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை, ஒரே ஒரு டெட் தேர்வை நடத்திவிட்டு மவுனமாக
இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரு முறையாவது டெட்
தேர்வு நடத்த வேண்டும், என்றார்.
Labels:
SCHOOL EDUCATION
Monday, May 18, 2015
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யும் வசதி
+2 Provisional Mark sheet
Direct Download Facility Introduced
பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவர்கள் இன்று முதல் http://www.dge.tn.nic.in/ வலைத்தளத்தில் Reg.No, Date of Birth அளித்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நிரந்தர மதிப்பெண் சான்றிதழ், மறுமதிப்பீடுக்கு பின் கிடைக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Labels:
RESULT
Saturday, May 16, 2015
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 18.05.2015 முதல் விண்ணப்பம்
GOVT POLYTECHNIC APPLICATION SALES
FROM 18.05.2015
TNDTE Announced
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
விண்ணப்பம், மே 18ம் தேதி முதல், விற்பனை செய்யப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 41 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு,
பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைபெறும் பகுதிநேர பட்டயப் படிப்பு
சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 18ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி
வரை விற்கப்படும்.
விண்ணப்பத்தின் விலை 150 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., இனத்தவருக்கு, இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்பத்தை, www.tndte.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள், அந்தந்த பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, ஜூன் 5ம் தேதிக்குள் வந்தடைய வேண்டும்.
Labels:
HIGHER EDUCATION
தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி திட்டம்: இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகம்
Anna University
Introducing
Direct Field Experience for Engineering Students
அனைத்து பல்கலைக்கழகங்களிலும்
தொழிற்சாலைகள் மற்றும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்றவாறு பாடத் திட்டங்களை
நவீனப்படுத்த, AICTE (All India Council for Technical Education)
உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டில்,
தொழிற்சாலைகளுடன் இணைந்த பயிற்சி திட்டங்கள் அறிமுகமா கின்றன.
முக்கிய அம்சங்கள்:
முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூட்டமைப்புகளுடன் அண்ணா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொள்ளும்.
இன்ஜினியரிங்
மாணவர்களுக்கு தொழிற்சாலையில் நேரடி பயிற்சி தரப்படும்.
தொழிற்சாலைகளுடன் இணைந்து மாணவர்களுக்கு புதிய செயல் திட்டம் வழங்கப்பட்டு தொழிற்சாலைகளை மாணவர்கள் நேரடியாக பார்வையிடலாம். படித்து முடித்த பின், அவர் பயிற்சி எடுத்த தொழிற்சாலையிலேயே வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கேற்ப தொழிற்சாலையின் தேவைக்கேற்ப புதிய படிப்பு மற்றும் பாடங்கள் கொண்டு வரப்படும்.
புதிய தொழில்நுட்ப பாடங்கள் உடனே தேவைப்பட்டால் தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழக வல்லுனர் குழு ஆலோசித்து, தேவையான மாற்றங்களை பாடத்திட்டத்தில் உடனே கொண்டு வரும்.
தொழிற்சாலை இன்ஜினியர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலை மாணவர்களை இணைத்து சிறப்பு பயிலரங்கம் நடத்தப்படும்.
மே 15 முதல் இத்திட்டத்தின் கீழ் பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் செய்ய
விரும்பும் தொழிற்சாலைகளுக்கான பதிவுகள் துவங்கியுள்ளன. வரும் ஜூன் 8ம்
தேதி வரை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, பின், இரு தரப்பிலும் ஒப்பந்தம் இறுதி
செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான தொழில்நுட்ப அறிவு பலமடங்கு மேம்படவும், வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கவும் வழி பிறக்கும்.
Labels:
HIGHER EDUCATION
Wednesday, May 13, 2015
+2 மாணவர்களுக்கு நாளை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
Provisional Mark Sheet விநியோகம்
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு நாளை(14.05.2015) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Sheet) மற்றும் மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படுகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
இம்மாதம் 7ம் தேதி, பிளஸ் 2 தேர்வு
முடிவு வெளியானது. தேர்ச்சி பெற்றவர் களுக்கு, தற்காலிக சான்றிதழ் வழங்கும்
திட்டத்தை, பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளிகளில், நாளை (14ம் தேதி) முதல் பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் தலைமை ஆசிரியரின்
கையொப்பத்துடன் வழங்கப்பட உள்ளது. இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இதை பயன்படுத்தி மாணவ, மாணவியர் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம். நாளை முதல் 18ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளில் இச்சான்றிதழ்
வழங்கப்படும்; அதன்பின், dge.tn.nic.in இணையதள முகவரியில் சென்று மாணவ,
மாணவியரே இச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Labels:
RESULT
Monday, May 11, 2015
பள்ளிகள் தயார்நிலை - மே 14 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகம்
தற்காலிக மதிப்பெண் பட்டியல்
(Provisional Marksheet)
மார்ச் 2015ல் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு 07.05.2015 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டது. இதில் அரசு பள்ளிகள் 84.26 சதவீதம், தனியார் மெட்ரிக்
பள்ளிகள் 97.67, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் 93.42 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்நிலையில் மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவப் படிப்பு, கலைப்படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்விகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக 14.05.2015 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகிக்கப் படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் சுற்றறிக்கை வழிகாட்டுதல்களின்படி, தற்போது அனைத்துப் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் பட்டியல் (Provisional Mark Sheet) பதிவிறக்கம் செய்து சரிபார்க்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது.
எனவே 14.05.2015 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு விரைந்து அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Labels:
SCHOOL EDUCATION
Sunday, May 10, 2015
அன்னையர் தினம் - இது நன்றி உணரும் தருணம் ( HAPPY MOTHER'S DAY WISHES TO ALL )
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை.
(ஈழப் போரில் தன் தாய் இறந்தது தெரியாமல் பால் அருந்தும் பச்சிளம் குழந்தை)
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
(இவன் தாயல்ல. இது தாய்மை)
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பாரதி, கண்ணதாசன் போல் எண்ணற்ற மேதைகள் சொல்லிய அன்னையின் பெருமைகளை , அவர்களைப் போல பிறருக்கு எடுத்துச் சொல்லும் தகுதி நமக்கு இல்லாததால், அகத்தியர் திரைபடத்தில், வயலின் மாமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையில் உயர்திரு பூவை செங்குட்டுவன் அவர்கள் எழுதிய பாடல் மேலே எடுத்தாளப் பட்டுள்ளது.
Friday, May 8, 2015
இன்ஜினியரிங் ‘கட்-ஆப்’ 0.75% விர்...; மெடிக்கல் ‘கட்-ஆப்’ 0.5% சர்....
இன்ஜினியரிங் ‘கட்-ஆப்’ உயர்வு
மெடிக்கல் ‘கட்-ஆப்’ குறைவு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு ’சென்டம்’ எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான ’கட் - ஆப்’
அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.இதேபோல் இயற்பியல், வேதியியல் மற்றும்
உயிரியலில், ’சென்டம்’ எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்புகளுக்கான ’கட் -
ஆப்’ குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 9,710 பேர்
’சென்டம்’ எடுத்துள்ளனர். இதேபோல் 198 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 15
ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் இந்த ஆண்டு இன்ஜினியரிங்
’கட் - ஆப்’ மதிப்பெண் 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர
வாய்ப்புள்ளது. இதனால் கடந்த ஆண்டு ’கட் - ஆப்’ மதிப்பெண்ணை விட அதிகம்
இருந்தால் மட்டுமே கடந்த ஆண்டு பட்டியலில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர
முடியும்.
இதேபோல் உயிரியல், இயற்பியல், விலங்கியல் போன்றவற்றில் ’சென்டம்’
எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதால் மருத்துவப் படிப்பு ’கட் - ஆப்’
மதிப்பெண் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஆண்டு அதிக
மதிப்பெண் பெற்று தற்போது தேவைப்படும் ’கட் - ஆப்’ வைத்திருப்பவர்கள் சுமார் 800 பேர் வரை உள்ளனர். இவர்கள் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு போட்டி போடுகிறார்களா
என்பதை வைத்தே இந்த ஆண்டு மாணவர்களுக்கு ’சீட்’ கிடைக்கும். இந்த ஆண்டு இயற்பியலில் ’சென்டம்’ எண்ணிக்கை குறைந்துள்ளதால் இயற்பியல் பாடமே மதிப்பெண்
தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Labels:
HIGHER EDUCATION
+2 தற்காலிக மதிப்பெண் பட்டியல், மறுகூட்டல், விடைத்தாள் நகல் - விவரங்கள்
+2
Details for Receiving Provisional Mark sheet &
Applying Copy of Answer Script, Re totaling
தற்காலிக மதிப்பெண் பட்டியல் (Provisional Mark sheet) வழங்கும் நாள்
|
From
14.05.2015
|
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் நாள்
|
08.05.2015 14.05.2015
|
சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப் பிக்கும் நாள் :
|
15.05.2015
20.05.2015
|
தற்காலிக மதிப்பெண் பட்டியல்
+2 தேர்வு முடிவுகள் பெறப்பட்ட பள்ளி மாணவர்கள் 14.05.2015 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலை (Provisional Marksheet) அவரவர் பள்ளிகளில் தலைமையாசிரியர் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் 08.05.2015 முதல் 14.05.2015(ஞாயிறு தவிர்த்து) வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.
Fees for Copy of the Answer Script
Tamil and other
Languages
|
Rs. 550/-
|
English
|
Rs. 550/-
|
Other Subjects (ஒவ்வொரு பாடத்திற்கும்)
|
Rs. 275/-
|
Fees For Re totaling
Tamil
and other Languages, English and Biology
|
Per
Subject
Rs.
305/-
|
All
other Subjects
(ஒவ்வொரு பாடத்திற்கும்) |
Rs.
205/-
|
சிறப்பு துணைத் தேர்வுகள்
மார்ச் 2015ல் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மாத இறுதியில் தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப் பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் 15.05.2015 முதல் 20.05.2015 வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் இல்லை.
Fees For Special Supplementary Exam
Per Subject (ஒரு பாடத்திற்கு)
|
Rs.
50/-
|
Other
Fees (Marksheet)
|
Rs.
35/-
|
Registration
Fees
|
Rs.
50/-
|
Labels:
SCHOOL EDUCATION
ESLC - 8ம் வகுப்பு தனித்தேர்வுகள் - ஹால் டிக்கெட் - DGE வெளியீடு
ESLC - 8ம் வகுப்பு தனித்தேர்வுகள்
11.05.2015 முதல் 20.05.2015 வரை நடைபெற உள்ள ESLC தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று www.tndge.in இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. Application No மற்றும் Date of Birth அளித்து ஹால் டிக்கெட்டை பெறலாம்.
Labels:
SCHOOL EDUCATION
Thursday, May 7, 2015
அண்ணா யுனிவர்சிடி Admission வாங்க https://www.annauniv.edu/tnea2015/ வெப்சைட் போங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் ஆண்டு சேர்க்கை விண்ணப்ப விற்பனை துவங்கியுள்ள
நிலையில், அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் பெயர் மற்றும் விவரங்கள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் 593 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள பாட விவரங்கள், இணைப்பு விவரம், போக்குவரத்து வசதி, விடுதி
வசதி, கேன்டீன் வசதி போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த
விவரங்களை, https://www.annauniv.edu/tnea2015 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு 593 கல்லூரிகளில் ஜாதிவாரியாக எவ்வளவு கட் - ஆப்
தேவைப்பட்டது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில், கடந்த
ஆண்டு எந்தப் பாடத்துக்கு, எந்த கட் - ஆப் மதிப்பெண் வரை மாணவ, மாணவியர்
சேர்க்கப்பட்டனர் என்ற விவரமும் இடம்பெறும். இதன்படி இந்த ஆண்டு, கட் - ஆப் எண்ணைக் கணக்கிட்டு, கல்லூரிகளை
மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
Labels:
HIGHER EDUCATION
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம் - பிளஸ் 2 ரேஸில் விருதுநகர் முதலிடம்; அரியலூர் கடைசி இடம்
மார்ச் 2015ல் நடைபெற்ற +2 தேர்வில்,
விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் 80.92 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம் பின்வருமாறு.
மாவட்டம்
|
தேர்வு
எழுதியவர்கள்
|
தேர்ச்சி
பெற்றவர்கள்
|
சதவீதம்
|
பள்ளிகளின்
எண்ணிக்கை
|
விருதுநகர்
|
22,304
|
21,737
|
97.46
|
193
|
பெரம்பலூர்
|
8,296
|
8,068
|
97.25
|
65
|
ஈரோடு
|
26,835
|
25,779
|
96.06
|
192
|
நாமக்கல்
|
31,020
|
29,702
|
95.75
|
187
|
தூத்துக்குடி
|
19,651
|
18,766
|
95.5
|
165
|
திருச்சி
|
32,476
|
30,969
|
95.36
|
221
|
கன்னியாகுமரி
|
25,322
|
24,108
|
95.21
|
209
|
ராமநாதபுரம்
|
14,844
|
14,051
|
94.66
|
121
|
கோவை
|
36,908
|
34,825
|
94.36
|
325
|
திருப்பூர்
|
23,238
|
21,916
|
94.31
|
174
|
சிவகங்கை
|
15,930
|
15,001
|
94.17
|
129
|
திருநெல்வேலி
|
34,565
|
32,461
|
93.91
|
278
|
தேனி
|
14,814
|
13,896
|
93.8
|
114
|
மதுரை
|
37,143
|
34,495
|
92.87
|
276
|
தருமபுரி
|
20,514
|
18,936
|
92.31
|
139
|
கரூர்
|
10,918
|
10,013
|
91.71
|
96
|
சென்னை
|
53,180
|
48,679
|
91.54
|
412
|
சேலம்
|
39,613
|
35,927
|
90.69
|
267
|
காஞ்சிபுரம்
|
44,676
|
40,514
|
90.68
|
312
|
தஞ்சாவூர்
|
29,598
|
26,715
|
90.26
|
194
|
திண்டுக்கல்
|
22,495
|
20,294
|
90.22
|
175
|
புதுக்கோட்டை
|
18,076
|
16,188
|
89.56
|
137
|
புதுச்சேரி
|
14,252
|
12,563
|
88.15
|
128
|
திருவள்ளூர்
|
41,365
|
36,121
|
87.32
|
298
|
ஊட்டி
|
8,559
|
7,424
|
86.74
|
72
|
கிருஷ்ணகிரி
|
21,392
|
18,499
|
86.48
|
145
|
நாகப்பட்டினம்
|
18,105
|
15,652
|
86.45
|
122
|
கடலூர்
|
28,093
|
23,792
|
84.69
|
191
|
விழுப்புரம்
|
36,738
|
30,846
|
83.96
|
253
|
திருவண்ணாமலை
|
24,362
|
20,326
|
83.43
|
193
|
திருவாரூர்
|
14,221
|
11,815
|
83.08
|
105
|
வேலூர்
|
42,220
|
34,364
|
81.39
|
306
|
அரியலூர்
|
7,548
|
6,108
|
80.92
|
63
|
Labels:
SCHOOL EDUCATION
Subscribe to:
Posts (Atom)