Saturday, May 28, 2016

தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு



 
தமிழகத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜூன் 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வி துறை, திட்டமிட்டபடி ஜூன் 1ல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது

Tuesday, May 24, 2016

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : இணையதளங்கள் விவரம் ( SSLC (10th) Results Will Be Announced on 25th May 2016)



10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணிக்கு வெளியிடப் படுகின்றன. 
இந்த முடிவுகளை, 
ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். 
மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை  பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

ஜூன் 1-ந் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து 

ன்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Marksheet) தாங்களாகவே  டவுன்லோடு செய்து கொள்ளலாம். அத்துடன், அன்றைய தினமே மாணவர்கள் பயின்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Verdict 2016: Spl Song Dedication to TN Leaders | Tamil The Hindu

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்: தமிழகத்தில் இந்த ஆண்டு +2 மதிப்பெண் அடிப்படையில் MBBS,BDS மாணவர் சேர்க்கை


மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (National Eligibility cum Entrance Test - NEET) மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதனை தமிழகம் உட்பட 15 மாநிலங்கள் எதிர்த்தன. இதனையடுத்து எழுந்த பல்வேறு அதிருப்தி காரணமாக, மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ஒராண்டு தள்ளி வைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் குறித்து ஒப்புதலுக்கு வந்த போது சில விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டார். நேற்று மதியம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நேரில் சென்று விளக்கமளித்தார். 

அதன் பின், மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, அதற்கான மசோதாவில் அவர் இன்று கையெழுத்திட்டார்.  

இதனையடுத்து, தமிழக அரசு வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வை நடத்த உள்ளது.

ஆனால், மத்திய அரசுக்  கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக NEET  தேர்வினை எழுத வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பிளஸ்2 சிறப்புத் துணைத் தேர்வு( +2 Supplementary Exam- June 2016 ): அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு



ஜூன்/ஜூலை 2016ல் நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2016 தேர்வில் தோல்வியுற்றவர்கள்/வருகைப்புரியாதவர்களுக்காக வருகிற 22.06.2016 அன்று தொடங்கி 04.07.2016 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2016, மேல்நிலை சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 24.05.2016 (செவ்வாய்கிழமை) முதல் 27.05.2016 (வெள்ளிக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் Browsing centre-கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
 
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

எச்வகை தனித்தேர்வர்கள் (H) ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-) மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்:

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக்கொள்ளலாம்.

Monday, May 23, 2016

5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா

  1. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களும் தள்ளுபடி
  2. அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்.
  3.   தாலிக்கு ஒரு பவுன் (8கிராம்) தங்கம்.
  4. கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட்டாக அதிகரிப்பு, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டாக அதிகரிப்பு.
  5. தமிழகத்தில் மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும், முதற்கட்டமாக 500 டாஸ்மாக் சில்லறை கடைகள் மூடப்படும், சில்லறை மதுபான விற்பனை கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

Saturday, May 21, 2016

+2 மாற்றுச் சான்றிதழ்(TC) , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Marksheet) - பள்ளிகளில் இன்று முதல் விநியோகம்

+2 மாற்றுச் சான்றிதழ்(TC) , தற்காலிக மதிப்பெண்  சான்றிதழ்(Provisional Marksheet)களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று CBSE 12ம் வகுப்பு ரிசல்ட் ( CBSE Senior School Certificate Examination (Class XII ) 2016 RESULT )


CBSE 12ம் வகுப்பு (Senior School Certificate Examination - Class XII )தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. பிற்பகல் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். 

Friday, May 20, 2016

மாவட்ட வாரியாக வெற்றி விவரம் - கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம்

(Image  Thanks to : Dinamalar )

கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் 
 


நோட்டாவுக்கு 5,61,244 பேர் வாக்களித்துள்ளனர்.  
நோட்டா வாக்கு சதவீதம் 1.3%. 

கட்சிகள்
வாக்கு
சதவீதம்
அதிமுக
40.8%
திமுக + காங்கிரஸ் + இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
31.6 + 6.4 +0.7 =  38.7%
38.7%
பாமக
5.3%
பாஜக
2.8%
தேமுதிக
2.4%
நாம் தமிழர் கட்சி
1.1%
மதிமுக
0.9%
விசிக
0.8%
சிபிஐ
0.8%
சிபிஎம்
0.7%
தமாகா
0.5%
 




























Thursday, May 19, 2016

மீண்டும் அ.தி.மு.க. - வெற்றி விவரங்கள்



கூட்டணி வாரியாக - முடிவுகள்
தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118
அணிகள்
வெற்றி
அதிமுக கூட்டணி
134
திமுக கூட்டணி
98
தேமுதிக - ..கூ
00
பாமக
00
பாஜக கூட்டணி
00
நாம் தமிழர்
00

+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Marksheet for +2 Students)


+2 தேர்வெழுதிய  மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி  http://www.dge.tn.nic.in  என்ற இணையதள முகவரியில்,  இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். 

பள்ளிகள் இன்று முதல் அவரவர்களுக்காக முதன்மைக் கல்வி அலுவலர்களால் வழங்கப்பட்ட USER ID, PASSWORD  பயன்படுத்தி www.peps.tn.nic.in மற்றும் www.peps.nic.in ன்ற இணையதள முகவரிகளில்  மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யவேண்டும். ஆனால் 21.05.2015 அன்று முதல் மட்டுமே மதிப்பெண் பட்டியல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். முன்னதாக விநியோகிக்கக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Wednesday, May 18, 2016

மாவட்ட வாரியாக, பள்ளி வாரியாக, பாட வாரியாக மற்றும் மாணவர்கள் தேர்ச்சி சதவிகித பகுப்பாய்வுகள்:(+2 MARCH 2016 - 12th Result Analysis For Students/Subjects/Schools/District Wise)


மார்ச் 2016ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்ச்சி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் தேர்ச்சி விகித பகுப்பாய்வுகளை அறிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம்
தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் தேர்ச்சி சதவிகித ஒப்பீடு 


Friday, May 13, 2016

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், வாக்களிக்க, எந்தெந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் : தேர்தல் ஆணையம்


 

வரும் மே 16 ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள்,  வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) இல்லாவிட்டாலும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள கீழ்க்கண்ட  11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க  முடியும்.

தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்கள் விவரம்

1. கடவுச்சீட்டு (Passport)2. ஒட்டுநர் உரிமம் (Driving License)
3. மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள் (Identity Card provided by central/state public sector employers)4. வங்கி/ அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது) (Bank/Post Office Passbook)
5. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card)
6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை ( Smart Card Provided by Chief Registrar of NPS)
7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை(MGNREGA Card)
8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை ( RSBY Card etc..)
9. புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம் ( Pension Docuemnts)
10. தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு  (Voters Slip)
11. பார்லி., சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை. ( Identity Card provided for MP/MLA/MLC)

இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர்கள் காண்பித்து தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

 

Friday, May 6, 2016

மே 17 ல் 12ம் வகுப்பு , மே 25 ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்



 

வரும் மே 17 ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 39 ஆயிரம் பேர், பத்தாம் வகுப்பு தேர்வை 10. 72 லட்சம் பேர் எழுதினர்.

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழு பறி ஏற்பட்டு வந்த நிலையில், இன்று தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதி காலை 9.30 முதல் 10 மணிக்குள்ளும்  வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

தேர்வு முடிவுகள் அரசு தேர்வு துறை www.tnresults.nic.in இணையத்தில் வெளியாகும்.