Showing posts with label XII Supplementary Examination June/July 2016. Show all posts
Showing posts with label XII Supplementary Examination June/July 2016. Show all posts

Thursday, June 16, 2016

+2 துணை தேர்வுக்கு இன்று முதல் Hall Ticket

ஜூன் 22 முதல் நடைபெற உள்ள  12ம் வகுப்பு சிறப்பு  துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். 

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு, 'தத்கல்' உட்பட அனைத்து வழியிலும், விண்ணப்பித்தவர்கள் இன்று முதல், தங்கள், 'ஹால் டிக்கெட்'களை, www.tngdc.gov.in  இணையதளத்தில், வரும் 18ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. 

விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாத பொதுத்தேர்வுக்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம், 'ஹால் டிக்கெட்'டை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tuesday, May 24, 2016

பிளஸ்2 சிறப்புத் துணைத் தேர்வு( +2 Supplementary Exam- June 2016 ): அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு



ஜூன்/ஜூலை 2016ல் நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2016 தேர்வில் தோல்வியுற்றவர்கள்/வருகைப்புரியாதவர்களுக்காக வருகிற 22.06.2016 அன்று தொடங்கி 04.07.2016 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2016, மேல்நிலை சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 24.05.2016 (செவ்வாய்கிழமை) முதல் 27.05.2016 (வெள்ளிக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் Browsing centre-கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
 
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

எச்வகை தனித்தேர்வர்கள் (H) ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-) மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்:

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக்கொள்ளலாம்.