Tuesday, May 24, 2016

பிளஸ்2 சிறப்புத் துணைத் தேர்வு( +2 Supplementary Exam- June 2016 ): அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு



ஜூன்/ஜூலை 2016ல் நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2016 தேர்வில் தோல்வியுற்றவர்கள்/வருகைப்புரியாதவர்களுக்காக வருகிற 22.06.2016 அன்று தொடங்கி 04.07.2016 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2016, மேல்நிலை சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 24.05.2016 (செவ்வாய்கிழமை) முதல் 27.05.2016 (வெள்ளிக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் Browsing centre-கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
 
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

எச்வகை தனித்தேர்வர்கள் (H) ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-) மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்:

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக்கொள்ளலாம்.

No comments: