Monday, July 27, 2015

Dr. A.P.J.Abdul Kalam -130 கோடி இந்திய இதயங்களின் தலைவன்

நீ 
தமிழணங்கின்   செல்ல மகன்.
130 கோடி இந்திய இதயங்களின் தலைவன் 
உலக இளைஞர்களுக்கு  ஞான குரு.
குழந்தைகளின் குழந்தை.

 (15.10.1931 - 27.07.2015)  

நீ எனது உயிரின் உயிர்.


மீண்டும் 
இந்நிலத்தில் நீ 
பிறந்து வர வேண்டும் என,
உன் பாதங்களை 
முத்தமிடும் 
பாலைவன மழைத்துளி 
நான்.

Dreams
is not what you see
in sleep.
Is the thing which
doesn't let you sleep. 

                                                      - Dr.A.P.J. Abdul Kalam

Friday, July 24, 2015

CONSOLIDATE MARKSHEET PROTOTYPE IN EXCEL

Click Here To download the 
Consolidate Marksheet Prototype Excel File.



Conditions

1. Ensure the Marks Between 1 - 200
2. If the Student is Absent then Specify  AAA  (3 A's) in marks columns

Includes
 
Total, Result, Rank are Calculated Automatically.

 More

More options are updated soon.

(for the requisition of friends.)

மாணவர்களுக்கு AADHAAR - பள்ளிகளில் முகாம் நடத்த கல்வித்துறை ஏற்பாடு


தமிழகம் முழுவதும்  அனைத்து வகை அரசுத் திட்டங்களுக்கும் AADHAAR எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகை மற்றும் இலவசத் திட்ட முறைகேடுகளைத் தடுக்க  ஆதார் எண்களை இணைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. 

ஆதார் எண் இணைப்புத் திட்ட தொடர்பு அதிகாரியாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது உத்தரவின்படி, மாணவ, மாணவியரின் ஆதார் எண் விவரங்களை  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.


இவற்றில்  70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் இல்லை என தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு  ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆதார் எண் உருவாக்கும் வகையில்  சிறப்பு முகாம் நடத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 

இதற்காக பெங்களூரிலுள்ள ஆதார் எண் திட்ட உதவி இயக்குனரகத்துடன், தமிழக பள்ளிக்கல்வித்துறை இணைந்து, முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Monday, July 20, 2015

2015-2016 GENERAL COUNSELING AND TRANSPER SCHEDULE - 29.07.2015 to 18.08.2015


ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணை

Date
Day
Tentative Schedule
29.07.2015
Wednesday
Govt/Municipal Hr.Sec. School HM Transfer
31.07.2015
Friday
Govt/Municipal Hr.Sec. School HM Promotion
03.08.2015
Monday
Govt /Municipal  High School HM Transfer
05.08.2015
Wednesday
Govt /Municipal  High School HM Promotion
07.08.2015
Friday
Govt/Municipal  PG Transfer
08.08.2015
Saturday
Govt/Municipal  PG Transfer (Dist to Dist
10.08.2015
Monday
Govt/Municipal  PG Promotion
11.08.2015
Tuesday
PET, Special, SGT Transfer (within Dist)
12.08.2015
Wednesday
PET, Special, SGT Transfer (Dist to Dist)
17.08.2015
& 18.08.2015
Monday
&
Tuesday
BT Asst Deployment Counselling

B.Ed மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு

கடந்த ஆண்டு வரை B.Ed  ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல் B.Ed  படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இம்மாத இறுதியில் B.Ed மாணவர் சேர்க்கையைத் துவங்க, TNTEU முடிவு செய்துள்ளது. 

அதற்காக  புதிய விதிமுறைகளை  தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. 

அதன் விபரம்
  • B.Ed படிப்பில் சேர  ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
  • M.Phil - Ph.D., மற்றும் முதுகலை படிப்பு படித்தவர்களும்  சேர முடியும்.
  • இளங்கலை படிப்பில், OC- 50; BC- 45; MBC- 43; SC, SCA- 40 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் மதிப்பெண்களுக்கு ஏற்ப  தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். PG- 4; M.Phil-5, Ph.D- 6 என வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
  • மேலும்  19 வகையான, ஆப்ஷனல் பாடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • B.Ed மாணவர் சேர்க்கை, சென்னை லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் நடக்கும்.
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் தேதி மற்றும் கவுன்சிலிங் குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

TNPSC Group 1 தேர்வு வயது வரம்பை உயர்த்த கோரிக்கை

TNPSC Group  1 தேர்வு எழுதுவதற்கான  வயது உச்ச வரம்பை  45 ஆக  உயர்த்த வேண்டும் என  தமிழக Group  1 தேர்வர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, கூட்டமைப்பு சார்பில் தமிழக  முதல்வருக்கு அனுப்பி உள்ள  மனுவில்,

'தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் தமிழ் வழியிலேயே கல்வி கற்கின்றனர். இவர்கள் Group 1 தேர்வு குறித்து  30 வயது கடந்த பின்னரே தெரிந்து கொள்கின்றனர். 

ஒன்று அல்லது இரண்டு தோல்விக்கு பின்னரே  தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என தெரிந்து கொள்கின்றனர். இதற்குள் தேர்வு எழுதுவதற்கான உச்ச வயது வரம்பை கடந்து விடுவதால்Group 1 தேர்வு குறித்து நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். 

UPSC  தேர்வுகள், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன.ஆனால் TNPSC Group 1 தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து  பணி நியமனம் வரை, மூன்று ஆண்டுகள் வரை  காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த காலகட்டத்தில்  பல இளைஞர்கள்  உச்ச வயது வரம்பை கடந்து விடுகின்றனர். இதில் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கேரளா, குஜராத், அரியானா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் Group 1க்கான உச்ச வயது வரம்பு  45 வயது என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  

09.07.2015 அன்று வெளியான, Group 1தேர்வுக்கான  உச்ச வயது வரம்பையும் 45 வயதாக உயர்த்தி தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும்' எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Sunday, July 19, 2015

தத்துபித்துவம் - Two in One





என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு 
எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா, 
ப்ளாட்பாரத்துக்கு 
வந்துதான் ஆகனும்.
இதுதான் வாழ்க்கை.




உங்கள எல்லாம் பாத்தா  எனக்கு பாவமா இருக்கு.





என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,

வெயில் அடிச்சா

திருப்பி....
அடிக்க முடியாது.
என்னய்யா தப்பு பண்ணான் 
என் கட்சிக்காரன்? 
ராங் நம்பர்னா சாரி சொல்லிட்டு போனை வச்சிட வேண்டியது தானே, அதானே ஒலக வழக்கம்....



இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா, 
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?





என்னடா சொல்ற.....



என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா 
ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது.
அதேமாதிரி, 
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், 
Ladies finger, Gens finger ஆய்டாது!!!

மா..மா 
நீங்க ரொம்ப அழகா பேசுறிங்க...




இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது, 
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
 ஹே மேல இருக்குற பொண்ணு!
நான் ரொம்ப ஹ..ல்..ல..கா இருக்கேன் இல்ல





டிசம்பர் 31 க்கும்
ஜனவரி 1க்கும் 
ஒரு நாள்தான் வித்தியாசம்.

ஆனால்,

ஜனவரி 1க்கும்,  
டிசம்பர் 31 க்கும்

ஒரு வருசம் வித்தியாசம்.

 டைம் ரொம்ப முக்கியம்
    தம்பி..... டீ இன்னும் வரல...





பில் கேட்ஸோட 
பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு 
போடும்போது, 
கடன் வாங்கித்தான் 
ஆகனும்.
பாஸ் பண்ண வைக்குற..
இல்லன்னா.....





சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா,
ட்ரெய்ன் ஓட்டுறது 
ட்ரெய்னிங்கா?
இல்ல பிளேன் ஓட்டுறது
தான் 
பிளானிங்கா?

ங்கொய்யால என்னையா 
50 ரூபா கொடுக்குற ....
அப்போ ட்ரெய்ன் முன்னாடி விழணும் பரவாயில்லையா......





வாழை மரம் தார் போடும்.
ஆனா 
அதை வச்சு
ரோடு போட முடியாது! 
கடுப்பேத்துறார் மை லார்ட்





ஆட்டோ'க்கு
' Auto' னு 
பேர் இருந்தாலும்,
Manual' லா தான் 
டிரைவ் பண்ண முடியும்.

ஹலோ,  பிரபா வைன் சாப் ஓனருங்களா,
 கடைய எப்ப சார் தெறப்பிங்க!





 
நிக்கிற பஸ்ஸுக்கு 
முன்னாடி 
ஓடலாம். 
ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி 
நிக்க முடியாது.

ன்னாமா... 
இப்படி பண்றீங்களே மா