Wednesday, April 13, 2016

திமுக வேட்பாளர் பட்டியல் - மே 2016 தேர்தல்



தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர் பட்டியலை கட்சியின்  தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று மாலை வெளியிட்டார்.  கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், காங்கிரஸ் 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5, மனிதநேய மக்கள் கட்சி 5, புதிய தமிழகம் 4, மக்கள் தே.மு.தி.க 3, பெருந்தலைவர் மக்கள் கட்சி -1,தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி - 1, சமூக சமத்துவ படைக் கட்சி -1 என கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 61 தொகுதிகள் போக  மீதமுள்ள  173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.திமுக சார்பில் 19 பெண்கள் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். 

திமுகவும் அதிமுகவும் இம்முறை 166 தொகுதிகளில் நேருக்கு நேர் மோத உள்ளன.



திமுகவின் வேட்பாளர் பட்டியல்



தொகுதியின் பெயர்
வேட்பாளர் பெயர்


1. கும்மிடிப்பூண்டி
சி.எச். சேகர்  (மக்கள் தேமுதிக)
2. பொன்னேரி (தனி)
டாக்டர் கே. பரிமளம்
3. திருத்தணி
காங்கிரஸ்
4. திருவள்ளூர்
வி.ஜி. ராஜேந்திரன்
5. பூவிருந்தவல்லி (தனி)
இ. பரந்தாமன்,
6. ஆவடி
சா.மு. நாசர்
7. மதுரவாயல்
காங்கிரஸ்
8. அம்பத்துhர்
காங்கிரஸ்
9. மாதவரம்
மாதவரம் எஸ்.சுதர்சனம்
10. திருவொற்றியூர்
கே.பி.பி. சாமி
11. ராதாகிருஷ்ணன் நகர்
திருமதி சிம்லா முத்து சோழன்
12. பெரம்பூர்
என்.ஆர்.தனபாலன் 
(பெருந்தலைவர் மக்கள் கட்சி)
13. கொளத்தூர்
மு.க. ஸ்டாலின்
14. வில்லிவாக்கம்
ப. ரெங்கநாதன்
15. திரு.வி.க. நகர் (தனி)
தாயகம் கவி (எ) சிவக்குமார்,
16. எழும்பூர் (தனி)
கே.எஸ். ரவிச்சந்திரன்,
17. இராயபுரம்
காங்கிரஸ்
18. துறைமுகம்
பி.கே. சேகர்பாபு
19. சேப்பாக்கம்
ஜெ. அன்பழகன்
20. ஆயிரம் விளக்கு
கு.க. செல்வம்
21. அண்ணா நகர்
எம்.கே. மோகன்
22. விருகம்பாக்கம்
க. தனசேகரன்
23. சைதாப்பேட்டை
மா. சுப்பிரமணியன்
24. தியாகராய நகர்
டாக்டர் எஸ்.என். கனிமொழி
25. மைலாப்பூர்
காங்கிரஸ்
26. வேளச்சேரி
வாகை சந்திரசேகர்
27. சோழிங்கநல்லூர்
எஸ். அரவிந்த் ரமேஷ்
28. ஆலந்தூர்
தா.மோ. அன்பரசன்
29. திருப்பெரும்புதூர் (தனி)
காங்கிரஸ்
30. பல்லாவரம்
இ. கருணாநிதி
31. தாம்பரம்
எஸ்.ஆர். இராஜா
32. செங்கல்பட்டு
ம. வரலட்சுமி மதுசூதனன்
33. திருப்போரூர்
வெ.விஸ்வநாதன்
34. செடீநுயூர் (தனி)
டாக்டர் ஆர்.டி.அரசு
35. மதுராந்தகம் (தனி)
நெல்லிக்குப்பம் புகழேந்தி
36. உத்திரமேரூர்
க.சுந்தர்
37. காஞ்சிபுரம்
சி.வி.எம்.பி. எழிலரசன்,
38. அரக்கோணம் (தனி)
எஸ்.பவானி
39. சோளிங்கர்
காங்கிரஸ்
40. காட்பாடி
துரைமுருகன்
41. இராணிப்பேட்டை
ஆர். காந்தி
42. ஆற்காடு
ஜெ.எல். ஈஸ்வரப்பன்
43. வேலூர்
ப.கார்த்திகேயன்
44. அணைக்கட்டு
எ.பி. நந்தகுமார்
45. கீழவைத்தியணான்குப்பம் (தனி)
வி.அமலு
46. குடியாத்தம் (தனி)
க. ராஜமார்த்தாண்டன்,
47. வாணியம்பாடி
சையத் பாரூக் (முஸ்லீம் லீக்)
48. ஆம்பூர்
மனித நேய மக்கள் கட்சி.
49. ஜோலார்பேட்டை
சி. கவிதா தண்டபாணி,
50. திருப்பத்தூர்
ஏ. நல்லதம்பி
51. ஊத்தங்கரை (தனி)
எஸ். மாலதி நாராயணசாமி
52. பர்கூர்
இ.சி. கோவிந்தராசன்
53. கிருஷ்ணகிரி
டி.செங்குட்டுவன்
54. வேப்பனஹள்ளி
பி. முருகன்
55. ஓசூர்
காங்கிரஸ்
56. தளி
பிரகாஷ்
57. பாலக்கோடு
பி.கே. முருகன்
58. பெண்ணாகரம்
பி.என்.பி. இன்பசேகரன்
59. தருமபுரி
தடங்கம் பெ. சுப்பிரமணி
60. பாப்பிரெட்டிபட்டி
டாக்டர் எம். பிரபு ராஜசேகர்
61. அரூர் (தனி)
சா. இராஜேந்திரன்
62. செங்கம் (தனி)
மு.பெ. கிரி
63. திருவண்ணாமலை
எ.வ. வேலு
64. கீழ்பென்னாத்தூர்
கு. பிச்சாண்டி
65. கலசபாக்கம்
காங்கிரஸ்
66. போளூர்
கே.வி. சேகரன்
67. ஆரணி
எஸ். பாபு
68. செய்யாறு
காங்கிரஸ்
69. வந்தவாசி (தனி)
அம்பேத்குமார்
70. செஞ்சி
செஞ்சி கே.எஸ். மஸ்தான்
71. மைலம்
டாக்டர் இரா. மாசிலாமணி
72. திண்டிவனம் (தனி)
பி. சீத்தாபதி சொக்கலிங்கம்
73. வானூர் (தனி)
இரா. மைதிலி இராசேந்திரன்,
74. விழுப்புரம்
அமீர் அப்பாஸ் (முஸ்லீம் லீக்)
75. விக்கிரவாண்டி
கு. இராதாமணி
76. திருக்கோவிலூர்
க. பொன்முடி
77. உளுந்தூர்பேட்டை
மனித நேய மக்கள் கட்சி
78. ரிஷிவந்தியம்
வசந்தம் க.கார்த்திகேயன்
79. சங்கராபுரம்
தா. உதயசூரியன்
80. கள்ளக்குறிச்சி (தனி)
பெ.காமராஜ்
81. கெங்கவல்லி (தனி)
ஜெ. ரேகா பிரியதர்ஷினி
82. ஆத்துhர் (தனி)
காங்கிரஸ்
83. ஏற்காடு (பழங்குடி)
சி. தமிழ்ச் செல்வன்
84. ஓமலூர்
எஸ். அம்மாசி
85. மேட்டூர்
பார்த்திபன் (மக்கள் தேமுதிக)
86. எடப்பாடி
எடப்பாடி பி.ஏ.முருகேசன்
87. சங்ககிரி
காங்கிரஸ்
88. சேலம் மேற்கு
சி. பன்னீர்செல்வம்
89. சேலம் வடக்கு
ஆர்.இராஜேந்திரன்,
90. சேலம் தெற்கு
எம்.குணசேகரன்,
91. வீரபாண்டி
ஆ.ராஜேந்திரன்,
92. இராசிபுரம் (தனி)
வி.பி. துரைசாமி
93. சேந்தமங்கலம் (பழங்குடி)
கே. பொன்னுசாமி
94. நாமக்கல்
காங்கிரஸ்
95. பரமத்தி - வேலூர்
கே.எஸ். மூர்த்தி
96. திருச்செங்கோடு
பார். இளங்கோவன்,
97. குமாரபாளையம்
பி. யுவராஜ்,
98. ஈரோடு கிழக்கு
வி.சி.சந்திரகுமார் ( மக்கள் தேமுதிக)
99. ஈரோடு மேற்கு
எஸ்.முத்துசாமி
100. மொடக்குறிச்சி
எஸ்.எல்.டி. ப. சச்சிதானந்தம்,
101. தாராபுரம் (தனி)
காங்கிரஸ்
102. காங்கேயம்
காங்கிரஸ்
103. பெருந்துறை
கே.பி. சாமி (எ) பி. மோகனசுந்தரம்
104. பவானி
குறிஞ்சி சிவகுமார் (எ) சிவக்குமார்
105. அந்தியூர்
ஏ.ஜி. வெங்கடாசலம்
106. கோபி
காங்கிரஸ்
107. பவானிசாகர் (தனி)
ஆர். சத்தியா
108. உதகமண்டலம்
காங்கிரஸ்
109. கூடலூர் (தனி)
மு. திராவிடமணி
110. குன்னூர்
பா.மு. முபாரக்
111. மேட்டுப்பாளையம்
சு. சுரேந்திரன்
112. அவினாசி (தனி)
சி. ஆனந்தன்
113. திருப்பூர் வடக்கு
மு.பெ.சாமிநாதன்
114. திருப்பூர் தெற்கு
க. செல்வராஜ்
115. பல்லடம்
சு. கிருஷ்ணமூர்த்தி
116. சூலூர்
காங்கிரஸ்
117. கவுண்டம்பாளையம்
ஆர். கிருஷ்ணன் (எ) பையாக் கவுண்டர்
118. கோயம்புத்தூர் வடக்கு
மீனா லோகு
119. தொண்டாமுத்தூர்
மனித நேய மக்கள் கட்சி
120. கோயம்புத்தூர் தெற்கு
காங்கிரஸ்
121. சிங்காநல்லூர்
ந. கார்த்திக்
122. கிணத்துக்கடவு
குறிச்சி பிரபாகரன்
123. பொள்ளாச்சி
இரா. தமிழ்மணி
124. வால்பாறை (தனி)
த. பால்பாண்டி
125. உடுமலைப்பேட்டை
மு.க.முத்து
126. மடத்துக்குளம்
இரா. ஜெயராமகிருஷ்ணன்
127. பழனி
இ. பெ. செந்தில்குமார்
128. ஒட்டன்சத்திரம்
அர. சக்கரபாணி
129. ஆத்தூர்
இ. பெரியசாமி
130. நிலக்கோட்டை (தனி)
மு. அன்பழகன்
131. நத்தம்
எம்.ஏ., ஆண்டி அம்பலம்
132. திண்டுக்கல்
ம. பஷீர் அகமது
133. வேடசந்தூர்
காங்கிரஸ்
134. அரவக்குறிச்சி
கே.சி. பழனிசாமி
135. கரூர்
காங்கிரஸ்
136. கிருஷ்ணராயபுரம் (தனி)
புதிய தமிழகம்
137. குளித்தலை
எ. ராமர்
138. மணப்பாறை
முகமது நிஜாம் (முஸ்லீம் லீக்)
139. திருவரங்கம்
எம். பழனியாண்டி
140. திருச்சிராப்பள்ளி மேற்கு
கே.என். நேரு
141. திருச்சிராப்பள்ளி கிழக்கு
காங்கிரஸ்
142. திருவெறும்பூர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
143. லால்குடி
எ. சௌந்தரபாண்டியன்
144. மண்ணச்சநல்லூர்
எஸ். கணேசன்
145. முசிறி
காங்கிரஸ்
146. துறையூர் (தனி)
செ. ஸ்டாலின் குமார்
147. பெரம்பலூர் (தனி)
சமூக சமத்துவ படைக் கட்சி
148. குன்னம்
தங்க துரைராஜ்
149. அரியலூர்
எஸ்.எஸ். சிவசங்கர்
150. ஜெயங்கொண்டம்
காங்கிரஸ்
151. திட்டக்குடி (தனி)
வெ. கணேசன்
152. விருத்தாசலம்
தங்க.ஆனந்தன்,
153. நெய்வேலி
சபா.இராஜேந்திரன்
154. பண்ருட்டி
பொன்.குமார்   (விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி)
155. கடலூர்
இள. புகழேந்தி
156. குறிஞ்சிப்பாடி
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
157. புவனகிரி
துரை கி. சரவணன்
158. சிதம்பரம்
கே.ஆர். செந்தில்குமார்
159. காட்டுமன்னார்கோவில் (தனி)
காங்கிரஸ்
160. சீர்காழி (தனி)
எஸ். கிள்ளை ரவீந்தரன்
161. மயிலாடுதுறை
குத்தாலம் க. அன்பழகன்
162. பூம்புகார்
ஏ.எம்.ஷாஜகான் (முஸ்லீம் லீக்)
163. நாகப்பட்டினம்
மனித நேய மக்கள் கட்சி
164. கீழ்வேளூர் (தனி)
உ. மதிவாணன்
165. வேதாரண்யம்
காங்கிரஸ்
166. திருத்துரைப்பூண்டி (தனி)
ப. ஆடலரசன்,
167. மன்னார்குடி
டி.ஆர்.பி. ராஜா
168. திருவாரூர்
மு.கருணாநிதி
169. நன்னிலம்
காங்கிரஸ்
170. திருவிடைமருதூர் (தனி)
முனைவர் கோ.வி. செழியன்
171. கும்பகோணம்
க. அன்பழகன்
172. பாபநாசம்
காங்கிரஸ்
173. திருவையாறு
துரை. சந்திரசேகரன்
174. தஞ்சாவூர்
டாக்டர் அஞ்சுகம் பூபதி
175. ஒரத்தநாடு
எஸ்.எஸ். ராஜ்குமார்
176. பட்டுக்கோட்டை
காங்கிரஸ்
177. பேராவூரணி
என். அசோக் குமார்
178. கந்தர்வக்கோட்டை (தனி)
டாக்டர் கே. அன்பரசன்
179. விராலிமலை
எம். பழனியப்பன்
180. புதுக்கோட்டை
பெரியண்ணன் அரசு
181. திருமயம்
எஸ். ரகுபதி
182. ஆலங்குடி
டாக்டர் கோ. சதீஷ்
183. அறந்தாங்கி
காங்கிரஸ்
184. காரைக்குடி
காங்கிரஸ்
185. திருப்பத்துhர்
கே.ஆர். பெரியகருப்பன்
186. சிவகங்கை
மேப்பல் ம. சக்தி (எ) சத்தியநாதன்
187. மானாமதுரை (தனி)
சித்திராச்செல்வி,
188. மேலூர்
அ.பா.ரகுபதி
189. மதுரை கிழக்கு
பெ. மூர்த்தி
190. சோழவந்தான் (தனி)
டாக்டர் ஸ்ரீ பிரியா தேன்மொழி
191. மதுரை வடக்கு
காங்கிரஸ்
192. மதுரை தெற்கு
எம். பாலச்சந்திரன்
193. மதுரை மையம்
பி.டி.ஆர்.பி. தியாகராசன்
194. மதுரை மேற்கு
கோ. தளபதி
195. திருப்பரங்குன்றம்
மு. மணிமாறன்
196. திருமங்கலம்
காங்கிரஸ்
197. உசிலம்பட்டி
கே. இளமகிழன்,
198. ஆண்டிப்பட்டி
எல். மூக்கையா
199. பெரியகுளம் (தனி)
வி. அன்பழகன்,
200. போடிநாயக்கனுhர்
எஸ். லெட்சுமணன்
201. கம்பம்
கம்பம் நா. இராமகிருஷ்ணன்
202. இராஜபாளையம்
எஸ். தங்கபாண்டியன்
203. திருவில்லிப்புத்தூர் (தனி)
புதிய தமிழகம்
204. சாத்தூர்
வே. சீனிவாசன்,
205. சிவகாசி
காங்கிரஸ்
206. விருதுநகர்
ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்,
207. அருப்புக்கோட்டை
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்
208. திருச்சுழி
தங்கம் தென்னரசு
209. பரமக்குடி (தனி)
உ. திசைவீரன்
210. திருவாடானை
சுப. த. திவாகரன்
211. இராமநாதபுரம்
மனித நேய மக்கள் கட்சி
212. முதுகுளத்தூர்
காங்கிரஸ்
213. விளாத்திகுளம்
சு. பீமராஜ்
214. தூத்துக்குடி
பெ. கீதா ஜீவன்
215. திருச்செந்தூர்
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
216. திருவைகுண்டம்
காங்கிரஸ்
217. ஒட்டப்பிடாரம் (தனி)
புதிய தமிழகம்
218. கோவில்பட்டி
அ. சுப்பிரமணியன்
219. சங்கரங்கோவில் (தனி)
க. அன்புமணி கணேசன்
220. வாசுதேவநல்லூர் (தனி)
புதிய தமிழகம்
221. கடையநல்லூர்
கே.ஏ.எம். முகமது அபுபக்கர் ( முஸ்லீம் லீக் )
222. தென்காசி
காங்கிரஸ்
223. ஆலங்குளம்
டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா
224. திருநெல்வேலி
ஏ.எல்.எஸ். லெட்சுமணன்
225. அம்பாசமுத்திரம்
இரா. ஆவுடையப்பன்
226. பாளையங்கோட்டை
டி.பி.எம். மைதீன்கான்
227. நாங்குநேரி
காங்கிரஸ்
228. இராதாபுரம்
மு. அப்பாவு
229. கன்னியாகுமரி
எஸ். ஆஸ்டின்
230. நாகர்கோவில்
என். சுரேஷ்ராஜன்
231. குளச்சல்
காங்கிரஸ்
232. பத்மநாபபுரம்
மனோ தங்கராஜ்
233. விளவன்கோடு
காங்கிரஸ்
234. கிள்ளியூர்
காங்கிரஸ்

வாட்ஸ்ஆப் இந்தியாவில் தடை செய்யப்பட வாய்ப்பு: அரசு பரிசீலனை

 
பாதுகாப்பு காரணங்களுக்காக, வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் சமீபத்தில் மறைக்குறியீடு (Encryption) மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள், இந்திய தொலைதொடர்பு சட்ட விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் சமீபத்தில் செய்த Encryption மாற்றங்கள் காரணமாக, இந்த செயலி மூலம் அனுப்பப்படும் செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் தவிர மற்ற யாரும் படிக்க முடியாது. .

வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்திகளை, சைபர் குற்றவாளிகள், ஹேக்கர்கள், ஏன், நாங்கள் கூட பார்க்க முடியாது என வாட்ஸ்ஆப் செயலியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். 

ஆனால் இந்திய சட்டப்படி இணையதளம் சேவைகளை 40 Bit Encryption வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கு மேல் அவர்கள் பயன்படுத்த வேண்டுமானால் இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும்.  இந்திய அரசின் அனுமதி பெற வேண்டுமானால், வாட்ஸ்ஆப் நிறுவனம், செயலியில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த முக்கிய தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். வாட்ஸ்ஆப் இதனை செய்யாது என்றே தெரிகிறது. மறைமுகமாக, அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவது சட்டவிரோதம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 2015 "NET" தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் 2016 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "NET' (National Eligibility Test) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.



நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்விநிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
தற்போது  2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம்  ஏப்.12 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும்.

Monday, April 11, 2016

திமுக தேர்தல் அறிக்கை - முழு வடிவில் (2016 சட்டமன்ற தேர்தல்)

தி.மு.க.வின் 144 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் 123 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


Click Here to download  DMK Election Manifesto.pdf.(59 MB)



தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் 
  1. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு சட்டம் - டாஸ்மாக் நிறுவனம் கலைப்பு - டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி. 
  2. மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.  

  1. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் 

  1. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் உருவாக்கப்படும்
  2. விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  3. அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்
  4. அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.
  5. கரும்புக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு 3,500 வழங்கப்படும் .
  6. நெல் கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  1. நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
  2. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
  3. சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி வழங்கப்படும்  
  4. ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.


  1. மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் 
  2. மீனவர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை.
  3. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5000 தரப்படும்.


  1. ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.
  2. வெள்ள சேதங்களை தடுக்க  5000 கோடியில் திட்டம்  

  1. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை குறைக்கப்படும் .
  2. தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும் 
  3.  வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.  
  4. மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி  
  5. முதியோர் உதவித்தொகை ரூ.1300 ஆக உயர்த்தப்படும்.
  6. தமிழகம் முழுவதும் முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை 

  1.  மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
  2. மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்  
  3. விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை வழங்கப்படும் 


  1. மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும் 
  2. தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.  

  1. தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைக்கப்படும் 
  2. பத்திரிக்கையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்  
  3. பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.
  4. தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.
  5. மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை  

  1. பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.
  2. அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.
  3. 3 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் .
  4. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
  5. அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233  காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.


  1. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை.
  2. தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் 16 லட்சம் மாணவர்களுக்கு 3ஜி,4ஜி தொழில்நுட்பத்தில் மாதம் 10 ஜிபி பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட இணைய இணைப்புக்கான டாங்கிளுடன் லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.
  3. மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை.
  4. படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை  
  5. பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.  

  1. சென்னை முதல் ஓசூர் வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்.
  2. மதுரை முதல் தூத்துகுடி வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்.  
  3. சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.
  4. நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.

  1. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  2. கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.
  3. 10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் தூர் வாரப்படும்.
  4. மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்.

Tuesday, April 5, 2016

வீட்டுக்கடன், குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறைந்தது: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்


2016-17 ஆண்டுக்கான முதல் ரிசர்வ் வங்கி கொள்கை நிர்ணயிக்கும் கூட்டம் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடைபெற்றது. 

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரகுராம் ராஜன் ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி, 

  • ரெபோ விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
  • சிஆர்ஆர் எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் அதே 4%-ல் தொடர்கிறது.
  • வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டியில் 0.25 சதவீதம் குறைந்துள்ளது.
  • வீட்டுக்கடன் மீதான வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
  • வங்கிகளுக்கான டெபாசிட் வட்டியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.