Showing posts with label PAN is Mandatory for Gold Purchase. Show all posts
Showing posts with label PAN is Mandatory for Gold Purchase. Show all posts

Thursday, November 10, 2016

2.5 லட்சத்திற்கு மேல் DEPOSIT செய்யப்படும் பணம், வருமானத்திற்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டால், வருமான வரி + 200% அபராதம்:

வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள அறிக்கை

வருமானத்திற்கு அதிகமான பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள், தபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .


அதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்படும் அதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களிடம் வருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு செய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம் அபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட வேண்டும் என அறிவித்துள்ளது. 


நகை வாங்க PAN எண் கட்டாயம் 

மேலும்,  நகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என வருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண் கட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

Sunday, January 10, 2016

2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோர் 'PAN CARD' எண்ணை தெரிவிக்க வேண்டும்

நகை விற்பனை  25% குறைவு 

2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோர், 'பான் கார்டு' எண்ணை தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், நகை விற்பனை, 25 - 30 சதவீதம் குறைந்து விட்டதாக, தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  

நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை கூட்டமைப்பான - ஜி.ஜே.எப்.,பின் தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது: 2016 ஜனவரி 1 முதல்,   2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோரிடம்  வருமான வரித் துறையின் பான் கார்டு எண் பெற வேண்டும் என, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
இதற்கு முன், இந்த வரம்பு, 5 லட்சம் ரூபாயாக இருந்தது; இது, தற்போது, 2 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டதால், தங்க நகை விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக,கிராமப்புறங்களில் நகை வர்த்தகம் குறைந்துள்ளது. நாட்டின் மொத்த நகை விற்பனையில், கிராமப்புறங்களின் பங்களிப்பு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கிராமப்புற மக்கள், பாதுகாப்பிற்காக, தங்க நகைகளில் முதலீடு செய்கின்றனர்.

பான் கார்டு இல்லாததால், பலர் நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு தழுவிய அளவில், தங்க நகை விற்பனை, 25 - 30 சதவீதம் சரிவடைந்துள்ளது. மத்திய அரசு, உடனே இப்பிரச்னையில் தலையிட்டு, பான்கார்டுக்கான நகை விற்பனை வரம்பை, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என
நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை கூட்டமைப்பின் சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது