Sunday, September 27, 2015

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: வால்பாறை To சாலக்குடி (பாகுபலி WaterFallsக்கு போலாம் ரைட்)

உங்களை நீங்கள் மறந்திருப்பீர்கள். நீங்கள் மறந்த, எங்கோ நீங்கள் தொலைத்த காதல் மீண்டும் உங்கள் மனம் முழுவதும் பரவும். நீங்கள் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் துள்ளி விளையாடுவீர்கள். குறைந்த பட்சம் உங்கள் மனம் மட்டுமாவது.

உங்கள் பரபரப்பு அடங்கி இருக்கும். உங்கள் கவலைகள் மறக்கப்படும். உங்கள் தன்னம்பிக்கை புதிய நிலங்களில் துளிர்க்கும் தைரியம் பெறும்.

இந்த இடத்தை உங்கள் வசப்படுத்த முடியுமா என்று கூட யோசிப்பீர்கள். இரவே இல்லாத நீண்ட பகல்பொழுது கிடைக்காதா என மனது ஏங்கும். மணித்துளிகள் நிமிடங்களில் கடக்கும். அழகின் பிரம்மாண்டத்தில் விதிர்விதிர்த்து மூச்சடைத்து நிற்பீர்கள்.

மெல்ல மெல்ல நெருங்கி, சட்டென சரிந்து,வேகமாக கீழிறங்கி, விட்டுவிட்டு வெகுதூரம் சிரித்துக்கொண்டே சென்றோடும் காதலியின் பிரிவினை போல ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்.
விட்டு வெளியேறும்போது பிரிந்து செல்லும் காதலர்களைப் போல உணர்வீர்கள்.

இதெல்லாம் எங்கே? 

புன்னகை மன்னன் படத்தில் வரும் நீர்வீழ்ச்சி, பையா படத்தில் "அடடா மழைடா" பாடலில் தமன்னா ஆடும் நீர்வீழ்ச்சி, ராவணன் படத்தில்  "உசுரே போகுதே" பாடல் உட்பட பெரும்பாலான காட்சிகள், அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் அனுஷ்கா'வைக் கடத்தி வைத்திருக்கும் காடு, பாகுபலி திரைப்படத்தில் உள்ளதைக் கொள்ளை கொள்ளும்  நீர்வீழ்ச்சி என இன்னும் பல திரைப்படங்களில் நாம் கண்டு களிக்கும்  அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தான்  அது.

தமிழகத்தில் வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக அதிரப்பள்ளி செல்லலாம்.   ஆசியாவிலேயே மிக நீளமான சோலையார்  அணை   வால்பாறையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. 
 
7 கி.மீ நீளமுள்ள இந்த அணை சாலக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம். கேரளாவின் சாலக்குடி செல்லும் சாலையில் வழச்சல் மற்றும் அதிரப்பள்ளி(65KM) நீர்வீழ்ச்சிகள் அருகருகே 4 கி.மீ இடைவெளியில்  உள்ளன .  

இதேபோல கேரளாவின் திருச்சூரில் இருந்து சாலக்குடி வழியாகவும் அதிரப்பள்ளி(Salakudi to Athirappalli 30 Km) நீர்வீழ்ச்சி அடையலாம். NH47ல் திருச்சூரிலிருந்து சாலக்குடி செல்ல முடியும். சாலக்குடியிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலை ரம்மியமானது. 


இந்த வழியே செல்லும் போது  Dream World Water Theme Park, Silver Storm Water Theme Park  ஆகியவற்றை பார்க்க இயலும். அமைதியான சாலக்குடி ஆறு எதிர்திசையில் சிரித்துக்கொண்டே பயணிக்கும்.

பொதுவாக இங்கு செல்ல செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பொருத்தமான காலம். எங்கு பார்த்தாலும் பசுமை, அமைதி, அழகழகாய் மேகங்கள், ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர், மேலெழும் வெண்பனிப் புகை.. 

சோலையார் அணையைக் கடந்து மலக்கப்பாறை செக்போஸ்ட் வழியாக சோலையார் ரிசர்வ் காடுகள் வழியே செல்லும் பாதை ரம்மியமானது.

வழச்சல் நீர்வீழ்ச்சியை அடைவதற்கு முன்பாக மற்றொரு செக்போஸ்ட் உள்ளது.  வழச்சல் நீர்வீழ்ச்சி  அதிரப்பள்ளிக்கு  5 கி.மீ  முன்பாகவே  உள்ளது.

 பசுமையான காடுகளில் ஊடாக அழகாக செல்லும் சாலை. சாலைகள் எங்கும் வானரங்களின் கொண்டாட்டங்கள். இங்கு நீங்கள் செக்போஸ்ட் சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல முடியும்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைய முதலில் அனுமதிச் சீட்டு பெறவேண்டும். 

இந்த அனுமதிச் சீட்டை அதிரப்பள்ளிக்கு முன்பு 5 கி.மீ தொலைவில் உள்ள வழச்சல் நீர்வீழ்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இரு நீர்வீழ்ச்சிகளும் சோலையாறு வனச்சரகத்திற்கு உட்பட்டது.

இங்கு உங்கள் கவலைகள், மன அழுத்தங்கள் அனைத்தையும் நீங்கள் மறந்து விடுவீர்கள்.

மன அமைதியையும், அளவில்லாத தனிமைப் பேரானந்தத்தையும் அடைவீர்கள்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகை நீங்கள் உணர்வீர்கள். 

 ஏன்? சொல்லப் போனால் நீங்கள் அந்த சூழலையும், அருவியின் அழகையும் ஒரு பெண்ணாக நினைத்து உங்கள் காதலைக் கூட சொல்வீர்கள்.

 இதுக்கு மேலயும் நீங்க யோசிக்கவா போறீங்க? சான்சே இல்ல. எப்போ கெளம்புறீங்க? போயிட்டு திரும்ப வரும்போது நீங்க எடுத்த photos எல்லாம் நம்ம மெயில்'கு அனுப்புங்க.

வேளாண் , கணினி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவு

பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.


ஆசிரியர்களின் சூழலை உணர்ந்து சக ஆசிரியர்களுக்கு நடப்பது போன்று விதிமுறைகளை பின்பற்றி கணினி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 
இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, 30.09.2015 வரை காலியாக உள்ள கணினி மற்றும் வேளாண்மை ஆசிரியர்கள் பணியிடங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக கணக்கிட்டு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.



Click Here to Download the Computer & Agri Teachers Transfer Counselling GO PDF



Friday, September 25, 2015

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை இலவசமாக மின்னணு முறையில் டிச.,31 முன் வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

தாலுகா வாரியாக இதற்கான ஒருங்கிணைப்பு மையங்கள் செப்.,30க்குள் தேர்வு செய்யப்பட உள்ளன. கல்வி உதவித்தொகை, உயர்கல்விக்காக பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகிய மூவகைச்சான்றுகள் தேவைப்படுகின்றன. சில நேரங்களில் இவை தாமதமாக கிடைப்பதால் உரிய காலத்தில் சமர்ப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்..

இந்நிலையில் தாலுகா வாரியாக ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்து டிச.,31க்கு முன் ஆறாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக இந்த மூவகை மின்னணு சான்றிதழை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் (பொறுப்பு) கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். 

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: 

இச்சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரே விண்ணப்பம் தரப்பட்டு நிரப்பி பெறப்படும். 3,000 முதல் 4,000 வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரின்டர், இணையதள வசதியுள்ள பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையங்களாக செப்.,30க்குள் தேர்வு செய்யப்படும். அங்கு தலைமையாசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தினமும் 100 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். விபரங்கள் சரிபார்க்கப்பட்டு டிச.,31க்கு முன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கு கட்டணம் கிடையாது. இதன்மூலம் தாலுகா அலுவலகத்திற்கு செல்வது தவிர்க்கப்படும். இப்பணிகள் கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் நடக்கும், என்றார்

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 143 Postman பணியிடங்கள் - கடைசி தேதி 04.10.2015

Re post
 

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 143 தபால்காரர் (Postman) பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ளன. 

பணியிடத்தின் பெயர்
போஸ்ட்மேன்
மொத்த பணியிடங்கள்
143
கல்வித்தகுதி
10ம் வகுப்பு பாஸ்
வயது வரம்பு
18 முதல் 27க்குள்
வயது வரம்பு தளர்வு

எஸ்.சி/எஸ்.டி,
5 ஆண்டுகள்
(32 வயது வரை)
ஓ.பி.சி
3 ஆண்டுகள் ( 30 வயது வரை)
தேர்வு செய்யும் முறை
தேர்வு
Objective Type – 100 மதிப்பெண்கள்

தேர்வு காலம்
2 மணி நேரம்
விண்ணப்பக் கட்டணம்
(அனைவருக்கும்)
ரூ. 100/-
தேர்வுக் கட்டணம்
ரூ. 400/-
(SC/ST/PH/பெண்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு நடைபெறும் இடங்கள்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி
தேர்வுக்கான பாடங்கள்
10ம் வகுப்பு தரத்திலான
பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ்
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை
www.dopchennai.in இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி
04.10.2015
மேலும் விவரங்களுக்கு

Thursday, September 24, 2015

கொஞ்சம் சிரிக்க, கொஞ்சம் சிந்திக்க


Source: Google+ , Facebook ,twitter.
Composed by: deccanbluediamonds.



*********

எல்கேஜி பையன்
:  
ஹலோ டீச்சர் இன்னிக்கு என் பையன்
ஸ்கூலுக்கு வர மாட்டான் ,அவனுக்கு    உடம்பு சரியில்லை
டீச்சர்
:
நீங்க யார் பேசறது ?
பையன்
:
எங்க அப்பா பேசறேன்

*********


*********
புருசன்
:  
ஆமா ,என்னடி இவ்வளவு நேரமா காலெண்டரை பார்த்துக்கிட்டு இருக்க
மனைவி
:
பல்லி விழும் பலன் பத்தி பார்த்துக்கிட்டு இருக்கேன்

புருசன்
:
கொண்டா நான் பார்க்கிறேன்,ஆமா பல்லி எங்க விழுந்தது ?

மனைவி
:
நீங்க சாப்பிட்ட சாம்பார்ல!!

*********





                              *********


ஒருதடவை மிஸ்டர் எக்ஸும் அவர் மனைவியும் ஆட்டோல போய்க்கொண்டிருந்தார்கள்.  ஓட்டுனர் கண்ணாடியை சரி செய்து கொண்டிருந்தார்.
 மிஸ்டர் எக்ஸ்  கோபமாக:
"ஏய், நீ என் மனைவியைக் கண்ணாடில பாத்துட்டிருக்க.  நீ வந்து பின்னாடி உட்காரு.  நான் ஆட்டோ ஓட்டறேன்."

*********

*********



ஒருதடவை மிஸ்டர் எக்ஸ்   இந்திய தேசியக்கொடி வாங்க கடைக்குப் போனார்.  அவர் கேட்ட கேள்விக்கு கடைக்காரர் மயக்கம் போட்டு விழாத  குறைதான்.   

அவர் கேட்டது   'இதுல வேற எதுனா கலர் இருந்தா காமிங்க'.


 *********



கோபுர தரிசனம் கோடி புண்ணியம்            


 


''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம  ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''

 


 ''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை  பார்த்துட்டு   மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''

 

  *********






மிஸ்டர் எக்ஸ், மிஸ்டர் ஒய்  ரெண்டுபேரும் சொர்க்கத்திற்கு லொகேஷன் பாக்க போனாங்க.  அங்கே  காந்தியும் பிபாஷா பாசுவும்  நடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாங்க.

மிஸ்டர் ஒய்   : காந்திக்கு இவ்ளோ மஜாவான தண்டனையா?

மிஸ்டர் எக்ஸ் : தண்டனை காந்திக்கு இல்ல, பிபாஷாவுக்கு.




  *********



அந்த ஜெராக்ஸ் கடைக்காரர் உன்கிட்டே காசே தர வேண்டாம்னு ஏன் சொன்னார் ?''

''  ஒரிஜினல், ஜெராக்ஸ்  இரண்டையும் படிச்சு , ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணிட்டு காசு தர்றேன்னு சொன்னேன் ,தப்பா ?''



  *********

 

போதும்.   இப்போ சிந்திக்க...

 




*********

 

 

*********

 


விடுமுறை நாட்களிலும் கட்டாயப்பணி : பள்ளி கல்வித் துறை அலுவலக ஊழியர்கள் சங்கம்



அரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி கல்வித் துறையில் 20க்கும் மேற்பட்ட இயக்குனரக மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் கல்வி திட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றிலும், பள்ளிகளிலும், 15 ஆயிரம் நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.இந்த அலுவலகங்களில், சில ஆண்டுகளாக, ஓய்வு பெறுவோர், பணி மாறுதல் பெறுவோர், விருப்ப ஓய்வு பெறுவோர் மற்றும் ஏற்கனவே உள்ள காலியிடங்களில் தேவையான  ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தேக்கமடைந்த பணிகளைக் கவனிக்க, அரசு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஊழியர்களை அலுவலகத்துக்கு வரச் சொல்லி, அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால் பல ஊழியர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளிடம் கூட ஒன்றாக இருக்க முடியாமல், மன அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில், இன்று (24.09.2015) பள்ளி கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாடு, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் நடக்கிறது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் A.S.ராஜேந்திர பிரசாத், பொதுச் செயலர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது: 

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆவணம் சேகரித்தல், பள்ளி வாரியாக புள்ளிவிவரம் சேகரித்தல் உள்ளிட்ட பல பணிகள், ஊழியர்கள் மீது கூடுதலாக சுமத்தப்படுகின்றன. 

எனவே, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை கூடுதலாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விடுமுறை நாட்களில் ஊழியர்கள் அலுவலகம் வர நிர்ப்பந்திக்ககூடாது. அலுவலக பணியாளர்களின் குறைகளைத் தீர்க்க, மூன்று மாதங்களுக்கு, ஒருமுறை உயரதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற பெயரில் அலுவலக பணியாளர்களை விசாரணையின்றி, போதிய காரணங்களின்றி ஆணைகள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். 

இதுகுறித்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசு அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.