உங்களை நீங்கள் மறந்திருப்பீர்கள். நீங்கள் மறந்த, எங்கோ நீங்கள் தொலைத்த காதல் மீண்டும் உங்கள் மனம் முழுவதும் பரவும். நீங்கள் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் துள்ளி விளையாடுவீர்கள். குறைந்த பட்சம் உங்கள் மனம் மட்டுமாவது.
உங்கள் பரபரப்பு அடங்கி இருக்கும். உங்கள் கவலைகள் மறக்கப்படும். உங்கள் தன்னம்பிக்கை புதிய நிலங்களில் துளிர்க்கும் தைரியம் பெறும்.
இந்த இடத்தை உங்கள் வசப்படுத்த முடியுமா என்று கூட யோசிப்பீர்கள். இரவே இல்லாத நீண்ட பகல்பொழுது கிடைக்காதா என மனது ஏங்கும். மணித்துளிகள் நிமிடங்களில் கடக்கும். அழகின் பிரம்மாண்டத்தில் விதிர்விதிர்த்து மூச்சடைத்து நிற்பீர்கள்.
மெல்ல மெல்ல நெருங்கி, சட்டென சரிந்து,வேகமாக கீழிறங்கி, விட்டுவிட்டு வெகுதூரம் சிரித்துக்கொண்டே சென்றோடும் காதலியின் பிரிவினை போல ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்.
விட்டு வெளியேறும்போது பிரிந்து செல்லும் காதலர்களைப் போல உணர்வீர்கள்.
இதெல்லாம் எங்கே?
புன்னகை மன்னன் படத்தில் வரும் நீர்வீழ்ச்சி, பையா படத்தில் "அடடா மழைடா" பாடலில் தமன்னா ஆடும் நீர்வீழ்ச்சி, ராவணன் படத்தில் "உசுரே போகுதே" பாடல் உட்பட பெரும்பாலான காட்சிகள், அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் அனுஷ்கா'வைக் கடத்தி வைத்திருக்கும் காடு, பாகுபலி திரைப்படத்தில் உள்ளதைக் கொள்ளை கொள்ளும் நீர்வீழ்ச்சி என இன்னும் பல திரைப்படங்களில் நாம் கண்டு களிக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தான் அது.
தமிழகத்தில் வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக அதிரப்பள்ளி செல்லலாம். ஆசியாவிலேயே மிக நீளமான சோலையார் அணை வால்பாறையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
7 கி.மீ நீளமுள்ள இந்த அணை சாலக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அணையில் இருந்து
கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு
ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம். கேரளாவின் சாலக்குடி செல்லும் சாலையில் வழச்சல் மற்றும் அதிரப்பள்ளி(65KM) நீர்வீழ்ச்சிகள் அருகருகே 4 கி.மீ இடைவெளியில் உள்ளன .
இதேபோல கேரளாவின் திருச்சூரில் இருந்து சாலக்குடி வழியாகவும் அதிரப்பள்ளி(Salakudi to Athirappalli 30 Km) நீர்வீழ்ச்சி அடையலாம். NH47ல் திருச்சூரிலிருந்து சாலக்குடி செல்ல முடியும். சாலக்குடியிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலை ரம்மியமானது.
இந்த வழியே செல்லும் போது Dream World Water Theme Park, Silver Storm Water Theme Park ஆகியவற்றை பார்க்க இயலும். அமைதியான சாலக்குடி ஆறு எதிர்திசையில் சிரித்துக்கொண்டே பயணிக்கும்.
புன்னகை மன்னன் படத்தில் வரும் நீர்வீழ்ச்சி, பையா படத்தில் "அடடா மழைடா" பாடலில் தமன்னா ஆடும் நீர்வீழ்ச்சி, ராவணன் படத்தில் "உசுரே போகுதே" பாடல் உட்பட பெரும்பாலான காட்சிகள், அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் அனுஷ்கா'வைக் கடத்தி வைத்திருக்கும் காடு, பாகுபலி திரைப்படத்தில் உள்ளதைக் கொள்ளை கொள்ளும் நீர்வீழ்ச்சி என இன்னும் பல திரைப்படங்களில் நாம் கண்டு களிக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தான் அது.
தமிழகத்தில் வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக அதிரப்பள்ளி செல்லலாம். ஆசியாவிலேயே மிக நீளமான சோலையார் அணை வால்பாறையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
7 கி.மீ நீளமுள்ள இந்த அணை சாலக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம். கேரளாவின் சாலக்குடி செல்லும் சாலையில் வழச்சல் மற்றும் அதிரப்பள்ளி(65KM) நீர்வீழ்ச்சிகள் அருகருகே 4 கி.மீ இடைவெளியில் உள்ளன .