Sunday, January 4, 2015

Online Payroll Preparation

ஆன்லைன் சம்பளப் பட்டியல் - செயல்படுத்திய அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.




அரசுப் பணியாளர்களுக்கான மாத ஊதியம் இதுவரை Offline ல் Foxpro மென்பொருள் மூலமாக தயாரிக்கப் பட்டு வந்தது. தற்போது பெரும்பாலான அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு அரசு அமைப்புகளின் சம்பள பட்டியல்களும் டிசம்பர் 2014 முதல் ஆன்லைன் முறையில் தயாரிக்கப் பட்டு கருவூலங்களுக்கு அனுப்பப் பட்டு வருகிறது .

பெரும்பாலான பள்ளிகளில் Offlineல் சம்பளப் பட்டியல் தயாரிக்கவே ஆள் இல்லாத நிலையில், நகர்புறங்களை தவிர இணையத்தை (internet)கற்பனையில் மட்டுமே காணக் கூடிய சூழலில் உள்ள கிராமப் புற பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் ஜனவரி 2015 முதல் online ல் சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இதற்காக http://218.248.44.31/tngepay/Login/Payrolllogin.aspx இணையத் தளத்தில் அளிக்கப் பட்டுள்ள  User Manual  குறிப்பிடத் தக்க அளவுக்கு பயனுள்ளதாக இல்லை. முதல் முதலாக அறிமுகப் படுத்தப் படும் இம்முறைக்கு ஒரே ஒரு பயிற்சி வகுப்பு கூட இல்லை.  டிசமபர் மாதமே சம்பளப் பட்டியல் சமர்ப்பித்த அலுவலகங்கள், அந்த சம்பளப் பட்டியளுக்கான விவரங்களை முதல் முறை இணையத்தில் பதிவேற்றுவதற்கு பட்ட தொல்லைகள் சொல்லி மாளாது.

இந்நிலையில் மாநில தொடக்கக்  கல்வி இயக்குநர் அவர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஆன்லைன் மூலம் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் முறையானது எந்த அளவுக்கு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதனால்  தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும்  ஜனவரி 2015 முதல் online  சம்பளப் பட்டியல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Online Payroll Preparation Guidelines

                         விரைவில்