Friday, May 8, 2015

+2 தற்காலிக மதிப்பெண் பட்டியல், மறுகூட்டல், விடைத்தாள் நகல் - விவரங்கள்

+2
Details for Receiving Provisional Mark sheet & 
Applying  Copy of Answer Script, Re totaling



தற்காலிக மதிப்பெண் பட்டியல் (Provisional Mark sheet) வழங்கும் நாள்
From  14.05.2015
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு  விண்ணப்பிக்கும் நாள்
08.05.2015    14.05.2015
சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு  விண்ணப் பிக்கும் நாள் :
15.05.2015
20.05.2015

தற்காலிக மதிப்பெண் பட்டியல்
+2 தேர்வு முடிவுகள் பெறப்பட்ட பள்ளி மாணவர்கள் 14.05.2015 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலை (Provisional Marksheet) அவரவர் பள்ளிகளில் தலைமையாசிரியர் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு  விண்ணப்பித்தல்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் 08.05.2015 முதல் 14.05.2015(ஞாயிறு தவிர்த்து) வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.

Fees for Copy of the Answer Script


Tamil and other Languages
Rs. 550/-
English
Rs. 550/-
Other Subjects (ஒவ்வொரு பாடத்திற்கும்)
Rs. 275/-



Fees For Re totaling
Tamil and other Languages, English and Biology
Per Subject
Rs. 305/-
All other Subjects
(ஒவ்வொரு பாடத்திற்கும்)
Rs. 205/-


சிறப்பு துணைத் தேர்வுகள் 
மார்ச் 2015ல்  தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மாத இறுதியில் தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப் பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் 15.05.2015 முதல் 20.05.2015 வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் இல்லை.

Fees For Special Supplementary Exam
Per Subject (ஒரு பாடத்திற்கு)
Rs. 50/-
Other Fees (Marksheet)
Rs. 35/-
Registration Fees
Rs. 50/-
 

ESLC - 8ம் வகுப்பு தனித்தேர்வுகள் - ஹால் டிக்கெட் - DGE வெளியீடு

 ESLC - 8ம் வகுப்பு தனித்தேர்வுகள்

11.05.2015 முதல் 20.05.2015 வரை நடைபெற உள்ள  ESLC தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று www.tndge.in இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.  Application No மற்றும் Date of Birth  அளித்து ஹால் டிக்கெட்டை பெறலாம்.

Thursday, May 7, 2015

அண்ணா யுனிவர்சிடி Admission வாங்க https://www.annauniv.edu/tnea2015/ வெப்சைட் போங்க!




அண்ணா  பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் ஆண்டு சேர்க்கை விண்ணப்ப விற்பனை துவங்கியுள்ள  நிலையில், அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் பெயர் மற்றும் விவரங்கள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் 593 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள பாட விவரங்கள், இணைப்பு விவரம், போக்குவரத்து வசதி, விடுதி வசதி, கேன்டீன் வசதி போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த விவரங்களை, https://www.annauniv.edu/tnea2015 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


கடந்த ஆண்டு 593 கல்லூரிகளில் ஜாதிவாரியாக எவ்வளவு கட் - ஆப் தேவைப்பட்டது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில், கடந்த ஆண்டு எந்தப் பாடத்துக்கு, எந்த கட் - ஆப் மதிப்பெண் வரை  மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர் என்ற விவரமும் இடம்பெறும். இதன்படி இந்த ஆண்டு, கட் - ஆப் எண்ணைக் கணக்கிட்டு, கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம் - பிளஸ் 2 ரேஸில் விருதுநகர் முதலிடம்; அரியலூர் கடைசி இடம்

மார்ச் 2015ல்  நடைபெற்ற +2 தேர்வில்,  விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 80.92 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. 

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம்  பின்வருமாறு.
மாவட்டம்
தேர்வு எழுதியவர்கள்
தேர்ச்சி பெற்றவர்கள்
சதவீதம்
பள்ளிகளின் எண்ணிக்கை
விருதுநகர்
22,304
21,737
97.46
193
பெரம்பலூர்
8,296
8,068
97.25
65
ஈரோடு
26,835
25,779
96.06
192
நாமக்கல்
31,020
29,702
95.75
187
தூத்துக்குடி
19,651
18,766
95.5
165
திருச்சி
32,476
30,969
95.36
221
கன்னியாகுமரி
25,322
24,108
95.21
209
ராமநாதபுரம்
14,844
14,051
94.66
121
கோவை
36,908
34,825
94.36
325
திருப்பூர்
23,238
21,916
94.31
174
சிவகங்கை
15,930
15,001
94.17
129
திருநெல்வேலி
34,565
32,461
93.91
278
தேனி
14,814
13,896
93.8
114
மதுரை
37,143
34,495
92.87
276
தருமபுரி
20,514
18,936
92.31
139
கரூர்
10,918
10,013
91.71
96
சென்னை
53,180
48,679
91.54
412
சேலம்
39,613
35,927
90.69
267
காஞ்சிபுரம்
44,676
40,514
90.68
312
தஞ்சாவூர்
29,598
26,715
90.26
194
திண்டுக்கல்
22,495
20,294
90.22
175
புதுக்கோட்டை
18,076
16,188
89.56
137
புதுச்சேரி
14,252
12,563
88.15
128
திருவள்ளூர்
41,365
36,121
87.32
298
ஊட்டி
8,559
7,424
86.74
72
கிருஷ்ணகிரி
21,392
18,499
86.48
145
நாகப்பட்டினம்
18,105
15,652
86.45
122
கடலூர்
28,093
23,792
84.69
191
விழுப்புரம்
36,738
30,846
83.96
253
திருவண்ணாமலை
24,362
20,326
83.43
193
திருவாரூர்
14,221
11,815
83.08
105
வேலூர்
42,220
34,364
81.39
306
அரியலூர்
7,548
6,108
80.92
63
 

பிளஸ் 2 தேர்வில் 90.6% தேர்ச்சி: மாநில அளவில் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்


தமிழகம், புதுச்சேரியில் 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 


தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா முதலிடம் பெற்றார். இவர் 1192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபோல் கோவை சவுடேஸ்வரி வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி நிவேதாவும் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 



1190 மதிப்பெண்கள் பெற்று 4 பேர் இரண்டாம் இடம் பிடித்தனர். ஈரோடு மாவட்ட ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், நாமக்கல் எஸ்.கே.வி.பள்ளியைச் சேர்ந்த பிரவீண், நாமக்கல் SSM Lakshmi Ammal மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சரண்ராம், திருச்சி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி வித்யவர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 


நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு துறை இயக்குநர் தேவராஜன் வெளியிட்டார். 

 பிளஸ் 2 தேர்ச்சியில் வழக்கம்போல் மாணவிகள் முன்னிலை 
 
பிளஸ் 2 தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%. கடந்த ஆண்டும் இதே தேர்ச்சி விகிதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.4%. இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் அரியலூர் 
 
2015 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 80.92 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 91.54 சதவீதத்துடன் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.

பாட வாரியாக 200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை:
 
இயற்பியல்- 124, வேதியியல்- 1,049, உயிரியல்-387, தாவரவியல்-75 விலங்கியல்-4, கணிதம்-9710, கணினி அறிவியல்-577, வணிகவியல்-819, கணக்குப்பதிவியல்-5,167, வணிகக் கணிதம்- 1,036 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர். 

இயற்பியலில் வீழ்ச்சி
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இயற்பியல் பாடத்தில் சதம் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. 
சாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்:
 
அரசியல் அறிவியல் பாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் முதலிடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளை விஞ்சிய மெட்ரிக் பள்ளிகள்:
 
2015 பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளிலேயே தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.  சுயநிதி மெட்ரிக் 97%, அரசுப் பள்ளிகள் 84% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
புதுச்சேரியில் 88.16% தேர்ச்சி:
 
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 88.16 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 1.45 சதவீதம் குறைவு.  புதுச்சேரியில் 88.16% பிளஸ் 2 தேர்ச்சி: 2 மாணவிகள் முதலிடம்  பெற்றுள்ளனர்.
 
தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (புரவிஷனல் மார்க் ஷீட்) தாங்கள் படித்த பள்ளியில் மே 14-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

Wednesday, May 6, 2015

TNPSC - Group II - 1241 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு


Probation Officer,Deputy Commercial Tax Officer, Junior Employment Officer, Assistant Inspector of Labour, Sub-Registrar, Handloom Inspector, Special Branch Assistant,Assistant Section Officer ,Assistant Inspector in Local Fund Audit, Audit Inspector ,Revenue Assistant  உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான Group II-  தேர்வு அறிவிப்பை  TNPSC வெளியிட்டுள்ளது.

Online Registration ஆரம்ப தேதி   :    30.04.2015
Online Registration முடிவு தேதி    :    29.05.2015
தேர்வு நடைபெறும் தேதி             :    26.07.2015

Group II தேர்வுகளுக்கான கையேட்டை பெற  கீழே கிளிக் செய்யவும்.


நாளை(07.05.2015) பிளஸ் 2 தேர்வு முடிவு!

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு விவரத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பாட வாரியாக மதிப்பெண்களுடன், குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலமும் மதிப்பெண்களுடன் முடிவுகளை அறியலாம். இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதன்முறையாக அறிமுகமாகிறது. தலைமை ஆசிரியரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தங்கள் பள்ளிகளில், வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின், தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்து பெறலாம். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால், வரும் 18ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியாகும்  இணையதள  முகவரி

Saturday, May 2, 2015

நீங்கள் வாங்கப்போகும் மனை அல்லது வீட்டின் மதிப்பு என்ன?

புதிய வீட்டையோ அல்லது பழைய வீட்டையோ வாங்கப் போகிறீர்களா? குறிப்பிட்ட ஏரியாவில் வீடுகள் என்ன விலையில் விற்கப்படுகின்றன என்பதில் குழப்பமாக உள்ளதா?  இதற்கு அரசின் பத்திரப்பதிவுத் துறை http://bit.ly/1EXusC9 இணையதளம் உதவுகிறது. 


ஒரு இடத்துக்கான சந்தை வழிகாட்டி மதிப்பையும்கூடப் பத்திரப்பதிவு இணையதளத்தில் பார்க்க வழி உள்ளது.  மனையின் Guideline Value மட்டுமல்லாமல் வீடுகளுக்கும்கூடச் சந்தை வழிகாட்டி மதிப்பைப் பார்க்க இயலும்.


வீடுகள் பற்றிய மதிப்பை அறிய இந்த இணையப் பகுதியில் இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. Flat , Independent  House என இரு பிரிவுகள் உள்ளன. அடுக்குமாடி வீடு பகுதியில் வீடு எந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது, யுடிஎஸ் எனப்படும் கட்டிடத் தளப் பரப்பு எவ்வளவு, வீடு அமைந்துள்ள மொத்தச் சதுர அடி, வீடு பழையதா புதியதா, வீட்டின் வயது, எந்தத் தளத்தில் வீடு உள்ளது, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மர வகை, கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், மேற்கூரை வகை, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர் ரகக் கற்கள் வகைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதற்கான பதில்கள் தெளிவாக இருந்தால் வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பு, கட்டிடத்தின் மதிப்பு தனித்தனியாகக் கொடுக்கப்படும். இதில் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் ஆன கட்டிடத்தின் மதிப்பை மட்டுமே பார்க்க முடியும். 

இதே போலத்தான் தனி வீட்டுக்கும் கேள்விகள் தொகுத்துக் கேட்கப்படுள்ளன. வீடு அமைந்துள்ள எல்லை, வீட்டின் மொத்தப் பரப்பளாவு, வீடு பழையதா புதியதா, வீட்டின் வயது, தளம், மர பயன்பாடு, கட்டுமானப் பொருள் பயன்பாடு, மேற்கூரை வகை, உயர் ரகக் கற்கள் பயன்பாடு ஆகியவற்றுடன் சில வசதிகள் பற்றிய கேள்விகளும் கேட்கப்படுள்ளன. மின்சாரம் வசதி, சுகாதார வசதி, குடி நீர் வசதி, வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரின் விவரங்களையும் அளித்தால் வீட்டின் மதிப்பும், அந்த வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பையும் தெரிந்துகொள்ளலாம். 

இந்த மதிப்பானது நாம் ஒரு இடத்தில் வீட்டைப் பார்க்கவும், அதன் அடிப்படையில் வீடு விலை குறித்துப் பேரம் பேசவும் வீடு வாங்குவது தொடர்பான முடிவுக்கு வரவும் ஓரளவுக்கு உதவும். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்தே நிலம் மற்றும் வீட்டின் மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதால், இந்த மதிப்பை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. சந்தை நிலவரம், ரியல் எஸ்டேட் நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசின் பத்திரப் பதிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், இது வீடு வாங்க உத்தேசித்துள்ளவர்களுக்கு ஓரளவு பயனுள்ளதாகவே இருக்கும். 

மேலும் விவரங்களுக்கு http://bit.ly/1EXusC9 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

Friday, May 1, 2015

சிந்தனை மாற்றங்களே உழைப்பாளர்களின் விடுதலை - மே தின வாழ்த்துக்கள் ( The May Day Greetings)



    
                              சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
                              உழந்தும் உழவே தலை.

காந்திகிராம பல்கலைகழகத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள   காந்திகிராம பல்கலைக்கழகம் 2015-16 கல்வியாண்டிற்கு ’ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கும் முறையை  அறிமுகம் செய்துள்ளது 

’ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறை ஒருசில மத்திய பல்கலைக் கழகங்களில் மட்டுமே உள்ளது. தற்போது காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அனைத்து பாடங்களுக்கும் ’ஆன்-லைன்’ மூலம் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Online   மூலம் விண்ணப்பிக்க http://www.ruraluniv.ac.in/includes/adm15/index.html வலைத் தளத்தை அணுகவும்.

P