Showing posts with label Tamilnadu School Education. Show all posts
Showing posts with label Tamilnadu School Education. Show all posts

Thursday, September 24, 2020

10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு தமிழக அரசு அரசாணை வெளியீடு

Disaster Management Act, 2005 - COVID-19 - To permit students studying in Standards 10 to 12 in Government/Government-Aided/Private schools to come to schools on a voluntary basis, for taking guidance from their teachers and issue of Standard Operating Procedures (SOP) with effect from 01.10.2020 .

Click Below

 G.O Ms. No. 523 Dt: September 24, 2020

அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு : அரசாணையின் விவரங்கள்

10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகள் செயல்படும் என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணையின் சுருக்கம்

1)      10ம் வகுப்பு முதல்  +2 வரை படிக்கும் மாணவர்களை இருபிரிவுகளாக பிரிக்க வேண்டும்.

2) ஒரு நாளைக்கு ஒரு பிரிவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். உதாரணமாக, முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவேண்டும்.  அடுத்த பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வர வேண்டும்.

3)     ஒரு நாளில் 50 சதவீத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

4) ஆசிரியர்களும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு

முதல் பிரிவு ஆசிரியர்கள் திங்கள் மற்றும் செவ்வாய் 

இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் புதன் மற்றும் வியாழன்

மீண்டும் முதல் பிரிவு ஆசிரியர்கள் வெள்ளி, சனி

ஆகிய நாட்களில் வகுப்புகள் நடத்தவேண்டும்.

 

அடுத்த வாரத்தில்

 

இரண்டாம் பிரிவு ஆசிரியர்கள் திங்கள், செவ்வாய்

முதல் பிரிவு ஆசிரியர்கள் புதன்,வியாழன்

இரண்டாம் பிரிவு ஆசிரியர்கள் வெள்ளி, சனி 

ஆகிய நாட்களில் வகுப்புகள் நடத்தவேண்டும்.

 

5)  10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அவர்கள் தன்விருப்பத்தின் பேரில், ஆசிரியர்களிடம் சந்தேகங்கள் கேட்டுப் பெற பள்ளிக்கு வரலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி பெற்று மட்டுமே அக்டோபர் 1ம் தேதி முதல் வர அனுமதிக்கப்படுவர்.

6) ஆன்லைன் கற்பித்தல் பணிகள் தொடரலாம்.

 

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்:

   மாணவர்கள் கைகளை கழுவ வசதியாக சோப்பு மற்றும் தண்ணீர், கைகளுக்கான சானிடைசர்கள் வைக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கைகளை கழுவிய பிறகே பள்ளிக்கு நுழைய வேண்டும்.

    பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு முன்னரே, அவர்களுக்கான நேரம் மற்றும் அட்டவணை குறித்து தெரிவிக்க வேண்டும்.

•    நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50% மாணவர்கள் ஒரு வகுப்பில் நாள் ஒன்றுக்கு அனுமதிக்க வேண்டும்.

  பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன்னதாக, பள்ளிகளில் உள்ள இருக்கைகள், கைப்பிடிச் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு வகை சாதனங்கள் அனைத்தும் சோடியம் ஹைப்போகுளேரைட் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இது ஒவ்வொரு நாளும் பள்ளி திறக்கும் முன்பாக செய்ய வேண்டும்.  

  பயோமெட்ரிக் வருகை பதிவை தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் குளிர்சாதன வசதிகளை  தவிர்க்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப்பநிலை அறியும் கருவியை கொண்டு சோதிக்க வேண்டும்.

   விளையாட்டு போட்டிகள், இறை வணக்கக்கூட்டம் போன்ற அதிக கூட்டம் சேரும் நிகழ்வுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.  

   ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையேயான கலந்துரையாடல்  சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரைத்தளங்களில் குறிப்பிட்ட அளவில் வட்டம் வரைய வேண்டும்.

     பள்ளிக்கு வெளியில் மாணவர்களை நிற்க வைக்க கூடாது.

•  கொரோனா தொற்று மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருந்தால், அவர்கள் நலமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகே வர அனுமதிக்க வேண்டும்.

   மாணவர்கள் போன் மூலமாகவும் ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டு பெறலாம்.

  வகுப்பறைகளிலும், பள்ளி வளாகத்தின் அனைத்து இடங்களிலும்    சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

•     நீச்சல் குளங்கள் இருந்தால் அவை மூடப்பட வேண்டும்.

   அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிகளில் தெரியும்படி பேனர்கள் வைக்க வேண்டும்.

   ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். எச்சில் துப்புவதையும் தவிர்க்க வேண்டும்.

  இருமல், தும்மல் போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளில் வாய் மற்றும் முகத்தை மறைக்க வேண்டும். அதற்காக கைகுட்டை, திசுத்தாள்கள், ஒரு முறை பயன்படுத்தும் காகிதங்கள் பயன்படுத்த வேண்டும்.

  மாணவ மாணவியருக்கான செய்முறை பயிற்சிகள் சோதனை அறையில் செய்ய வேண்டி இருந்தால், அதிகபட்சமாக ஒரு செய்முறையில் எந்த அளவுக்கு மாணவர்கள் தேவையோ அவர்களை அனுமதித்து, அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அப்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

   உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். அந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், அவர் இருந்த பகுதி அல்லது வளாகத்தை உடனடியாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.