Showing posts with label Reserve Bank operational guidelines for exchange Rs.500 Rs 1000 Notes. Show all posts
Showing posts with label Reserve Bank operational guidelines for exchange Rs.500 Rs 1000 Notes. Show all posts

Wednesday, November 9, 2016

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றும் போது மக்கள் கவனிக்க வேண்டியவை. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்

தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததும், மக்கள் பணபரிவர்த்தனை செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் 
*ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற வங்கிகள் 10ம் தேதி முதல் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.
*வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். ரூ.4 ஆயிரத்திற்கு மேல் தொகை என்றால் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில்தான் டெபாசிட் செய்யப்படும்.
* பணம் பரிவர்த்தனை செய்ய அடையாள அட்டை கட்டாயம். இன்டெர்நெட் வழியிலான பண பரிவர்த்தனைக்கு எந்த தடையுமில்லை.
*வரும் 18ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ரூ.2000ம் மட்டுமே வங்கியில் எடுக்க முடியும்.,19ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வங்கியில் எடுக்கலாம்.
*அனைவரும், வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியமாகிறது. அப்படியானால்தான், ரூ.4000த்துக்கும் மேற்பட்ட மதிப்பில் பணத்தை மாற்றும்போது வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய முடியும்.
*நேரில் வந்து பணத்தை மாற்ற முடியாதவர்கள் அத்தாட்சி கடிதம் மூலமாக தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி பணத்தை மாற்றம் செய்துகொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. 
மேலும் விவரங்களுக்கு நிதி அமைச்சகத்தின், http://finmin.nic.in/ என்ற வெப்சைட் முகவரியை பார்க்கலாம். 
மேலும், 02222 602201,02222 602944 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.