Showing posts with label Nano GPS Chip in New 500. Show all posts
Showing posts with label Nano GPS Chip in New 500. Show all posts

Wednesday, November 9, 2016

புதிய ரூ.500, 2000 ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப். பதுக்கினால் செயற்கைக்கோள் கண்டுபிடித்துவிடும்.

நாளை மறுநாள் முதல் புதிதாக வங்கிகள் மூலமாக புழக்கத்தில்  வெளியிடப்பட  உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன நேனோ ஜிபிஎஸ் சிப் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள் முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாம். பூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்பதும் கூடுதல் செய்தியாக பரவி வருகிறது.