Showing posts with label Aadhaar must for property registration. Show all posts
Showing posts with label Aadhaar must for property registration. Show all posts

Sunday, November 13, 2016

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' ( AADHAAR ) எண் கட்டாயமாக்குவதற்கான வழிமுறைகள் ஆய்வு. (Aadhaar Number is mandatory for Registration of Property)

சொத்து பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதை கட்டாயமாக்கி, யார் பெயரில் எவ்வளவு அசையா சொத்து உள்ளது என்பதை கண்காணிப்பதற்கான வழிமுறைகள்,மத்திய அரசால் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன.

ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கத்துக்காக உருவாக்கப்பட்ட  வரைவு விற்பனை பத்திர நகலில், விற்பவர், வாங்குபவர் இருவரும்  ஆதார் மற்றும் பான் எண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பரிமாற்றத்துக்கு வரும் சொத்துக்கள், யார் பெயரில் இருந்து யார் பெயருக்கு செல்கிறது என்பதை இதன் மூலம் அரசால் கண்காணிக்க முடியும்.இதேபோல பரிமாற்றத்துக்கு வராமல், ஒரே நபர் பெயரில் நீண்ட காலமாக இருக்கும் சொத்துக்களின் பத்திரங்களிலும் ஆதார் எண்களை சேர்ப்பதற்கான கட்டுப்பாடு களை விதிக்க, மத்திய அரசு தயாராகி வருகிறது.