Showing posts with label Aadhaar mandatory for All Bank Transactions from 01.01.2017. Show all posts
Showing posts with label Aadhaar mandatory for All Bank Transactions from 01.01.2017. Show all posts

Saturday, December 3, 2016

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம் - RBI அறிவிப்பு

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய,  01.01.2017 முதல் Aadhaar எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ATM, Credit Card, NetBanking, Mobile Banking உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு PIN Number  மற்றும் Passwordகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், 

வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் ஆதார் வழி மட்டுமே செய்ய முடியும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும்.ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான KYC(Know Your Customer) திட்டத்திற்கு மாற்றாக Aadhaar  எண்ணை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.