Wednesday, October 28, 2020

ஊரடங்கு காலத்தில் வசூலித்த 6 மாத தவணைக்கான வட்டிக்கு வட்டி தொகையை நவம்பர் 5க்குள் வழங்க வேண்டும் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு (EMI Moratorium: Loan interest waiver to be credited to borrowers by November 5)

 

வங்கிகள், நிதி நிறுவனங்களில் மக்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை(EMI) திருப்பி செலுத்துவதில் இருந்து, கொரோனா ஊரடங்கு காரணமாக  மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 31,2020 வரையிலான 6 மாதங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. 

ஆனால் இந்த தவணைக்காக மக்களிடம் வங்கிகள், நிதி றிறுவனங்கள் வட்டிக்கு வட்டி வசூலித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் ரூ.2 கோடி வரையிலான அனைத்து கடன்களுக்குமான 6 மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஊரடங்கு காலத்தில் தவணையை முறையாக திருப்பி செலுத்தியவர்களுக்கும், ஊக்குவிக்கும் விதமாக  வட்டிக்கு வட்டி தொகைக்கு இணையான தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. 

இந்நிலையில், அனைத்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், ‘வங்கிகளில் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் கடன் மீது வசூலிக்கப்பட்ட 6 மாதங்களுக்கான வட்டிக்கு வட்டி தொகையை (Interest on Interest) உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும். நவம்பர் 5ம் தேதிக்குள் இத்தொகையை வழங்கி முடிக்க வேண்டும்,’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று (28.10.2020) வெளியீடு - 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (29.10.2020) வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பு (SSLC , XII , XI SUPPLIMENTARY RESULTS )

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று(28.10.2020) காலை 10 மணிக்கும், 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று (28.10.2020) மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும்  எனவும்  தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் அக்டோபர் .29ம் தேதி வெளியிடப்படும்  

மாணவர்கள் தங்கள்  தேர்வு முடிவுகளை மதிப்பெண் சான்றிதழாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை  www.dge.tn.gov.in அல்லது  http://www.dge.tn.gov.in/result.html  இணையதள பக்கங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, October 8, 2020

இன்று (08.10.2020) முதல் இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் (TNEA 2020 General Counselling)

  

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் முடிந்தது. இன்று முதல் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. 1,10,873 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

    நான்கு கட்டங்களாக, பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எந்தெந்த தரவரிசையில் உள்ள மாணவர்கள், எப்போது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என்ற விபரம் TNEA வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணையை கீழே பார்க்கலாம்.


தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் 1533 பேருக்கு கலந்தாய்வு அட்டவணை பின்வருமாறு.


 

 

Sunday, October 4, 2020

B.Sc Nursing , B.Pharm படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு இன்று முதல் ஆரம்பம்

மருத்துவத் துறைக்கு உதவும் துணைப் படிப்புகளான B.Sc  Nursing , B.Pharm, B.P.T ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது

தமிழக அரசு செய்திக்குறிப்பு:

B.Sc Nursing, Radiotheraphy Technology, Radiography, Anesthesia, cardiac, Ophthalmology, Accident and Emergency Care Technology, Medical Laboratory Technology (MLT), B.Pharm, BBT, BOT, Bachelor of Audiology & Speech Language Pathology (BASLP), போன்ற 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்க கடைசித் தேதி 15.10.2020.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

செயலர்,
தேர்வுக்குழு,
162,
பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை.10.

மேற்கண்ட முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:-

http://pmc.tnmedicalonline.xyz/Default.Html 

https://www.tnhealth.tn.gov.in/ 

www.tnmedicalselection.org