Thursday, February 23, 2017

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஐவர் குழு- 30.06.2017க்குள் அறிக்கை அளிக்க உத்தரவு: தமிழக முதல்வர்

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி,  தமிழக அரசு ஊழியர்களின்  ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க  5 பேர் கொண்ட  அலுவலர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இந்த அலுவலர் குழு தமது அறிக்கையை 30.06.2017க்குள்  அரசுக்கு அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

இக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை செயலாளர், உறுப்பினர் செயலாளர் உமாநாத் ஆகியோர் இடம்பெறுவர்

இந்த 'அலுவலர் குழு' மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூமியை போன்ற 7 கோள்கள் கண்டுபிடிப்பு : 3 கோள்களில் உயிர்கள் இருக்க வாய்ப்பு : நாசா

பூமியை போன்று 7 புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது. 

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, கோள்கள் குறித்து அறியும் வகையில் நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்செர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா விஞ்ஞானிகள் நேற்று நேரலையில் அறிவித்தனர்.  

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போன்றே மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அந்த 3 கோள்களில் நீர் ஆதாரம், பாறைகள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கோள்கள் உள்ளன. அங்கு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான காற்று, நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், பூமியை போன்றே மேற்பரப்பும் அடர்த்தியும் காணப் படுகிறது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Wednesday, February 1, 2017

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை. 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை 5%



பட்ஜெட் 2017 நிதி அறிக்கையில் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் உடையோருக்கான வருமான விரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது


தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை. அதே ரூ 2.5 லட்சம்தான் உச்ச வரம்பு. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் அல்லது சம்பளம் பெறுவோருக்கு 10 சதவீதமாக இருந்த வரி, இப்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை. அதே ரூ 2.5 லட்சம்தான் உச்ச வரம்பு. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் அல்லது சம்பளம் பெறுவோருக்கு 10 சதவீதமாக இருந்த வரி, இப்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.