Wednesday, June 1, 2016

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள் அல்லது பங்கேற்காதர்வளுக்காக ஜூன் 29 முதல் ஜூலை 8ம் தேதி வரை சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அவரவர் படித்த பள்ளிகள் அல்லது தேவெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குநர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று  ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்

தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ. 175

ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகளிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

ஹால்டிக்கெட்

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக் கொள்ளலாம்.

No comments: