Sunday, November 23, 2014

Yoga



வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் யோகா ஒரு பாடமாக சேர்க்க வாய்ப்பு


- மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறை அமைச்சர், ஸ்ரீபத் நாயக்



வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள  பள்ளிகளில் யோகா ஒரு பாடமாக சேர்க்க வாய்ப்புள்ளதாக மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் அறிவித்துள்ளார்.


     ஏற்கனவே 12ம் வகுப்பு அல்லது பட்டப் படிப்பு படித்து வீட்டில் உள்ள பெண்களுக்கும், வேலைவாய்ப்புகளை எதிர் நோககி உள்ள 12ம் வகுப்பு மற்றும்  பட்டதாரி இளைஞர்களுக்கும் இது ஒரு முக்கிய செய்தி என்பதை கவனத்தில் கொள்ளவும்.



      தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் Diploma Yoga, B.Sc Yoga, M.Sc Yoga, M.A Yoga என பல்வேறு பாட திட்டங்கள் உள்ளன. மிக குறைந்த கட்டணத்தில் படித்து பட்டம் பெறலாம்.

     யோகா பயில்வது, உங்கள் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் என்பது நிச்சயம்.



     ஏனெனில் இன்றைய தலைமுறை மாணவர்கள் உணர்ச்சிகளுக்கும், சூழல் சார்ந்த தாக்கங்களுக்கும், மனதை திசை திருப்பக் கூடிய பல வகையான புறக்காரணங்களுக்கும் ஆளாகி மனச்சிதைவை பெற்றிருக்கிறார்கள்.

தவறான சிந்தனைகளும், வழிகளும் அவர்களை எளிதில் ஆட்கொள்கின்றன. சிந்திக்கும் ஆற்றல் குறைந்த,  சாகசங்களை மட்டும் விரும்புகின்ற, எதுவும் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற மன நிலை கொண்ட, படைப்பாற்றல் அற்ற, சோம்பல் மாணவர்களே அதிகம் உருவாகின்றனர். இதன் மறு வெளிப்பாடகவே பெருகி வரும் கொலை, கொள்ளை, வன்முறை, எண்ணற்ற விபத்துக்கள் என்பதை நாம் தினந்தோறும் ஊடகங்களில் காண்கிறோம்.



இவற்றை எல்லாம் விலக்கி, பயனுள்ள, சக்தி வாய்ந்த இளைஞர் சமுதாயம் உருவாக வேண்டுமெனில் அறவழி கல்வி அவசியம். அதற்கு பொருத்தமான சிறந்த வழியைத்தான் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 வேதாத்ரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மையத்துடன் இணைந்து பல்வேறு பல்கலைக் கழகங்கள் Diploma Yoga, B.Sc Yoga, M.Sc Yoga, M.A Yoga என பல்வேறு பாட திட்டங்களை நடத்தி வருகின்றன.  வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். படிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள http://www.vethathiri.edu.in/  என்ற முகவரியில் தேடவும்.
                                            By Admin.