Thursday, January 17, 2019

வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர வாய்ப்பு ( 2019 Interim Budget: IT Exemption likely to be increased to Rs 5 lakh)



தனிநபர் வருமானவரி உச்சவரம்பை வரும் பட்ஜெட்டில் ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 1-ந்தேதி இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் பிரதமர் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் நாடாளுமன்ற தேர்தல் வருவதாலும் பல்வேறு சலுகைகள் இடம் பெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும் ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.